ஆங்கிலம், ஜெர்மனி போன்ற மொழிகளுக்கென கார்பஸ் உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கென கார்பஸ் இல்லை. கார்பஸ் என்பதை தரவு மொழியியல் என்கிறோம். ஒரு குறிப்பிட்ட மொழிக்கான இலக்கண விளக்கங்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன் கூடிய தரவுத்தளமாகும். இதில் ஒரு மொழிக்கான அத்தனை பண்புகளும் அடங்கிவிடும்.
POST: 2013-03-08T20:07:25+05:30
புகழ் வாய்ந்த அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் ஆளவை மன்றத்தில் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் தமிழ்ப்பிரிவு,வைணவ இலக்கியங்கள்-பன்முகப்பார்வை தேசிய கருத்தரங்கின் தொடக்க விழாவில் தொடக்கவுரை ஆற்றினேன்.அவ்வண்ணமே 404 கட்டுரைகள் தொகுப்புடைய 8 தொகுதிகள் வெளியீட்டின் படிகளையும் பெறும் வாய்ப்பும் இன்று காலை கிடைக்கப் பெற்றேன்.
POST: 2013-03-07T21:24:50+05:30
கணினியில் ஒரு மொழியை கொண்டுவர எழுத்துருக்களும், விசைப்பலகையும் முக்கியமோ, அதுபோல மொழிக்கருவிகள் முக்கியமாகும். ஒருவர் தமிழில் ஒரு ஆவணத்தை உருவாக்குகிறார். உருவாக்கிய பின் அதனை சொல்திருத்த வேண்டும். இலக்கண பிழைகளை சரிபார்க்க வேண்டும். தமி்ழ் மொழியைப் பொருத்தவரை சந்தி பிழைகளை சரிபார்க்க வேண்டும். எனவே, இவற்றை தான் மொழிக்கருவிகள் என்கிறோம். இதற்கு சொல் பகுப்பான், தொடர் வாக்கிய பிரித்தல் போன்ற கருவிகளை உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால், ஒரு வினைச்சொல்லுக்கு அதிகபட்சமாக 5 அல்லது 6 வ ...
POST: 2013-03-06T22:54:22+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று காலை சுவடியியல் பன்னாட்டுக் கருத்தரங்கின் தொடக்க விழாவில் முனைவர் இராமகி தலைமையில் வாழ்த்துரை வழங்கினேன்
POST: 2013-03-05T21:02:59+05:30
தாய்மொழி மட்டுமே கற்று கணினியைத் தொடாதிருந்தவர்களை கணினியின் பக்கம் திருப்புவதற்காக, தாய்மொழி வழியாக கணினியைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சியில் மொழியியல் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கும் பணி ஒருபுறம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
POST: 2013-03-04T22:21:56+05:30
ஒளிவு மறைவின்றி உதடுகளை திறந்த உள்ளத்தில் மறைந்திருப்பதை பேசுக! எய்யா கூறிக்கிளத்தல் செய்யா எம் சிறு செந்நாவே! அந்த நாவுக்குரிய என்பது புறநானூற்றுத் தொடர் இங்கு உருதுப்பாடலில் பிழிந்த கருத்தாக அமைந்ததைப்பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்... Bol ki lab azaad hain terey Bol zubaan ab tak teri hai -Faiz Ahamed Faiz Speak out for your lips are free Speak out for your tongue is still yours.
POST: 2013-03-04T15:43:05+05:30
Attended the inauguration session of the Conference of Vice Chancellors of Universities in Tamilnadu,listened to the speeches of seven Honourable Ministers of Tamilnadu and His Excellency the Governor of Tamilnadu and Chancellor of Sate universities this morning at Raj Bhavan
POST: 2013-02-28T22:32:14+05:30
நாளுக்கு நாள் அறிவு வளர்கிறது. வேலைக்கு வேலை சிந்தனை பெருகுகிறது. கையில் தாளும் எழுதுகோலும் படிப்பதற்கு நூலும் சொல்லிக்கொடுப்பதற்கு ஓர் ஆளும் இன்று அறவே நீங்கிவிட்டுக் கையிலும் பையிலும் கணினி அமர்ந்திருக்கிறது. ஏனிக் கணினியாக ஏழடி உயரத்தில் தொடங்கி மேசைக்கணினியாக மாறி மடிக்கணினியாக உருவெடுத்து இப்போது மடித்து வைக்கும் கைக்குட்டை அளவுக்கு அணிக்கணினிகள் (ஐபேட்) வந்துள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மைகள் கேட்ட காலம் போய் ஐபேடு 3ஜீ தொலைபேசியும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
POST: 2013-02-28T22:12:06+05:30
பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் சீரிய முயற்சியில் நடைபெற்ற தமிழ்க் கணினி மொழியியல் பயலிரங்கத்தின் நிறைவு விழா இன்று பிற்பகல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறு,குறு தொழிற்துறை அரசு செயலர் திரு தனவேல் தலைமையில் வாழ்த்துரை வழங்கினேன்.
POST: 2013-02-25T14:38:56+05:30
அறிவியல் ஒளி இதழின் ஆசிரியர் நா. சு.சிதம்பரம் தொய்வில்லாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக வெளியிட்டு வரும் சிறப்பு மலரை இன்று காலை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வெளியிட்டு சிறப்புரையாற்றினேன்
