பொறியாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி பாலமிடச்செலவு செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது. எவன் திருடி விடுவானோ, ஒப்பந்தக்காரன் ஏமாற்றிவிடுவானோ என்று நாளெல்லாம் நினைத்தபடி பாலம் கட்டுவானேன்,பழி வந்து சேர்வானேன்,பள்ளத்தில் விழுந்து மக்கள் சாகட்டுமேயென்று தினம் கோயில் வழிபாடு செய்யும் உத்தம பொறியாளரை கண்டு காரி உமிழ வேண்டாமா என்று பேரறிஞர் அண்ணா பேசியபோது அதிகாரிகள் மருண்டனர்
POST: 2013-04-03T12:38:57+05:30
கொடுபடல் என்பது ஒரு வகையில் விடுபடுவதாகும். நயனுடையான் கண் செல்வம் படின் பயனுடையதாகும். ஏழைகளும் எளியவர்களும் கல்வி வாய்ப்பினால் உயர்ந்த போது அரசுப்பணம் மக்கட்பணம் என்பதை உணராது தமக்கு கிடைக்காத பணம் பிறருக்கு கொடுப்பதா என்ற கயமை மனத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள் என்று மாமன்னன் மார்க்க அரேலியர் எழுதி வைத்தார்.
POST: 2013-04-02T15:16:34+05:30
உறவினரை காணச்செல்லும் பொழுது காந்த ஈர்ப்புடைய பொருள் நோய்க்கு கெடுதல் செய்யும் என்பதற்காக மகுடமில்லாமலே மன்னர் மருத்தவமனைக்கு சென்றார்,மகுட மில்லாததால் மன்னரை அடையாளம் தெரியாமல் வரிசையில் நிற்க வைத்தார்கள்.இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டில்!
POST: 2013-04-02T15:00:44+05:30
வலைப்பின்னல் என்பது வளர்ந்து வரும் உலகத்தில் தலைப்பின்னலாக இருக்கிறது மின்னல் வெளிச்சத்துக்குள் மின்னிசோட்டாவில் பேனாவை வைத்திருந்தேன் என்ற தகவலை அனுப்பிய தகவல் விரைந்து கையில் கிடைத்துவிட்டது.அது தொலைபேசி வைத்திருப்பவர்களுக்கு அழகு. எவர் கையிலும் தொலைபேசி இருக்கிறது.எடுக்க அஞ்சுகிறார்கள்.இதய நோயில் வருந்துகிறவர்கள் என்ன செய்வார்கள்? சான்றாக புகழ் வாய்ந்த ஊடகத்தில் என் தந்தை இல்லம் திரும்பியவுடனயே தொலைபேசி ஊடகத்தின் சீருந்திலேயே சென்றுவிட்டதே என்று புலம்பினார்.இரவு பதினோரு மணிக்கு ஊடகம் மூடப் ...
POST: 2013-04-01T23:36:08+05:30
ஆங்கிலம் அறிந்தால் பேரறிஞர் அண்ணாவின் தம்பிக்கு கடிதம்-22.5.1960 ஆங்கில மொழியின் துணைபெறின், அகில உலகப் பேச்சுத் தொடர்புக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும், இன்றுவரை மலர்ந்துள்ள கருத்துக்களை அறிந்து தொடர்பு கொள்ள வழி கிடைக்கிறது. பண்டைய நாட்களில் பாங்குடன் விளங்கிய பாபிலோன், கிரீஸ், ரோம், சீனம், - காணலாம் ஆங்கில மொழி மூலம்! கன்பூஷியஸ், சாக்ரடீஸ், பிளேடோ, அரிஸ்டாடில், கான்ட், மில் - போன்ற மெய்ஞ்ஞானிகளுடன் உரையாடி, உள்ளத்துக்கு உவகை தேடிடலாம், நெறிகளில் நேர்த்தி பெறலாம், ...
POST: 2013-03-31T16:31:24+05:30
காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே தெளிவு பிறந்திருக்க வேண்டும். தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை! விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு ஏறணங்கு தன் தொடரை தொடங்குவார்.எவராவது விமானம் செல்வதை நிறுத்தினார்களா? போகும் போதே தடுப்பது அபசகுணம் என்று கூறுவார்களா? ஆர்க்காடு தோன்றிய நாளிலிருந்து தோல் பதனிடும் தொழிலால் ஆறு கெடுகிறது. அறிவியலை எதிர்ப்பவர்கள் ஐ நாவை தலையிடச்சொல்வது என்னப்பொருத்தம்? வளிக ...
POST: 2013-03-31T16:21:18+05:30
காலம் தாழ்த்துவது கண்மூடித்தனம்.இருபது ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தபோதே தெளிவு பிறந்திருக்க வேண்டும். தொழிலுக்கே செயற்கை என்று தான் பொருள்,இயற்கைக்கு எதிரானது செயற்கை! விமானத்தில் அமரும்போதே விபத்து நேருமானால் என்ற எச்சரிக்கை குறிப்போடு ஏறணங்கு(Airhostess) தன் தொடரை தொடங்குவார்.எவராவது விமானம் செல்வதை நிறுத்தினார்களா? போகும் போதே தடுப்பது அபசகுணம் என்று கூறுவார்களா? ஆர்க்காடு தோன்றிய நாளிலிருந்து தோல் பதனிடும் தொழிலால் ஆறு கெடுகிறது. அறிவியலை எதிர்ப்பவர்கள் ஐ நாவை தலையிடச்சொல்வது என்னப்பொருத ...
POST: 2013-03-30T13:53:36+05:30
இணையில்லாத தமிழ்ப்பெருமாட்டி இராதா தியாகராசன் ----------------------------------------------------------------------------------------------- கலையன்னை டாக்டர் திருமதி இராதா தியாகராசன் கேரள மாநிலத்திலிருந்து மதுரை வந்து கருமுத்து குடும்பத்தோடு கலந்து செந்தமிழ்க்கல்வியைச் செழுமையுற வளர்த்துக் கொண்டவர். உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களிடம் மாணவ நிலையிலிருந்து கல்வித்திலகமாக மலர்ந்து உரைவேந்தரின் நற்றினை உரைக்கே அணிந்துரை எழுதியவர். திருவாசகத்தில் வாழ்நாளெல்லாம் திளைத்து மகிழ்ந்து ஆங்கிலத்தில் ...
POST: 2013-03-29T16:38:20+05:30
இந்தியப் பெருநாடு முப்பது மாநிலங்களுக்கு மேல் கொண்டதாகும். மாநிலங்கள் தத்தமக்கு உரிய கட்சிகளுக்கு வாக்களித்து அரசமைத்துக் கொள்கின்றனர். அயல்நாட்டு உறவு பாதுகாப்பு சில நிலைகளில் கல்வி முதலியன நடுவன் அரசின் ஆணையில் உள்ளன. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் இணைந்த ஒரு பொதுமையைத்தான் நாம் தேசீயம் என்கிறோம். (NATIONAL) வானொலியைக்கூட அனைத்திந்திய வானொலி என்று வழங்குகிறோம். அனைத்திந்திய என்பது தான் தேசியமாகும்.
POST: 2013-03-28T22:00:25+05:30
Translation is a very subtle thing unless you are emotionally in contact with the original author. You can not do a good job of it. In translating an author, you practically engage to speak for him in a new language, and you can not do so unless you are speaking for an old friend, so to speak. And your friend, knowing how strange his own expressions are often sound in a foreign language gives you some freedom in expression, provided that he can trust that you truly understand what he was trying ...
