பொய் நம்பிக்கை பாம்பு பால் குடிக்கும் என்பது பாமரனின் நம்பிக்கை.படிப்பறியாதவன்,பழகாதவன் பா வுக்கு மோனை வரவேண்டும் என்று இப்படி சொல்லியிருக்கிறான்.நல்ல வேளை பாதாம் கீர் என்று சொல்லவில்லை! எளிய மக்கள் புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள், அது மண்ணால் உறிஞ்சப்படும்.இது போக பாம்பு வாயைத்திறந்தாலும் பால் ஊற்ற முடியாது. பொதுவாக பாம்புகள் வேட்கையினால் நீர் பருகும்.பாம்புகளை நாக பஞ்சமி விழாவின் போது பட்டினி கிடைக்கச் செய்து பால்,சர்க்கரைப்பொங்கல்,நெய்,தயிர் இவற்றைப்படைத்து அவற்றை வாய் வைப்பதால் நோய ...
POST: 2013-02-24T22:53:46+05:30
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து இன்று காலை தமிழ்க்கணினி மொழியியல் சிறப்புப் பயலரங்க தொடக்க விழாவில் வாழ்த்துரை வழங்கினேன்
POST: 2013-02-24T22:42:17+05:30
பொது நல ஆர்வலராக சுழற்கழகத்தின் சுழலும் தேனியாக சமய ஆர்வமும்,சமுதாய நலமும் கொண்ட நண்பர் திருச்சி கோபிநாத் இன்று காலை திடுமென மறைந்தார். காலஞ்சென்ற ரங்கராஜன் குமாரமங்கலம்,அரசியல் வாணரும்,தணிக்கை யாளுருமான குருமூர்த்தி, இல கணேசன்,திருச்சி சிவா பல இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்,தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நெருங்கிப்பழகி கலகலப்பாக கூட்டத்தோடு வாழந்தவர்,மறைந்து விட்டார் . வாழ்வது நம் கையில் இருக்கிறது என்பதை தெரிந்த கொள்ளாமல் காலம் செல்ல செல்ல ஆறு வற்றி விடுகிறது என்கிற விழிப்பில்லாமல் தடுமாறுவது ...
POST: 2013-02-21T22:15:26+05:30
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற காலம்போய் கணினியை நம்பினோர் கைவிடப்படார் என்றாகிவிட்டது. தமிழாசிரியர்கள்,கல் தோன்றி மண் தோன்றாக் காலம் என்ற கதை தொடங்குவார்கள் என்ற காலம் மாறிவிட்டு, புலி வாலைப்பிடிக்கிறோமோ இல்லையோ, கணினியின் எலிவால் நம் கைக்கு அகப்படுகிறது....
POST: 2013-02-20T15:31:01+05:30
சலியாத உழைப்புக்குச் சான்று அண்ணல் இரா சனார்த்தனம் ----------------------------------------------------------------------------- திராவிட மாணவர் இயக்கத்தில் துடிப்பாக இருந்து தமிழர் இன எழுச்சிக்கு பெருந்துணையாக இருந்து சட்டமன்ற மேலவை உறுப்பிராகவும்,முடுக்குனராகவும்(கொறடா ) பணியாற்றி இலங்கைத்தமிழர்களின் இன்னலை காட்டி பதவி விலகியவர். ஆயிரம் ஈழத்தமிழர்களை அரவணைத்து வாழந்த இரா சனார்த்தனம் எந்த அரண் இன்றி,இன்று காலையில் மறைந்தார். எனக்கு ஆறு வயதிலிருந்தே அவரைத்தெரியும்.அவருடைய மறைவு ஓர் அர ...
POST: 2013-02-19T16:51:10+05:30
தூய்மையின்மை,துப்புரவின்மை,விழிப்பின்மை கண்காணிப்பின்மை,கல்வியின்மை, தெளிவின்மை ஆகிய ஆறு மைகளையும் இல்லாத நாடுதான் உலகத்தில் ஒழுங்கான மனிதர்களை கொண்ட நாடு என்று நாம் கருத வேண்டும்
POST: 2013-02-17T12:36:02+05:30
ஞான பீட விருது இந்த முறை தமிழுக்கு கிடைத்திருக்கிறதாம்.பெயரைத் தெரிந்து கொண்டால் அஞ்ஞான பீடம் என்று சொல்ல மனம் துடிக்கும்.நச்சுச்சொற்கள்,பச்சைச்சொற்கள்,கொச்சைச்சொற்கள் என்ற குப்பைக்குவியலுக்கு கொலுசு கட்டுவது தான் சிரிப்பு என்று கருதலாம் அட நாராயணா!
POST: 2013-02-17T12:23:01+05:30
குப்பை மாநகரம் என்று மும்பையை கூறுவார்கள்.தப்பு மாநகரம் என்று கொல்கொட்டாவை கூறுவார்கள்.பக்தி மாநகரம் என்று திருமலையைக் கூறுவார்கள்.சக்தி மாநகரம் என்று மதுரையைக்கூறுவார்கள்.இலக்கிய மாநகரம் என்றால் டப்ளின் ஐ கூறுவார்கள்.இங்கே பிறக்கும் போதே எழுதக்கற்றுக்கொள்கிறார்கள்.கற்றப்பின் நிற்க என்று சொன்னார் என்பதற்காக திருவள்ளுவரைக்கூட நிற்க வைத்திருக்கிறோம்! பிடித்தால் ஒரு பிடிக்குள் அகப்படாத அயர்லாந்து,அந்நாட்டு அறிஞர்களோ தம் எழுத்தால் உலகையே பிடித்துவைத்திருக்கிறார்கள்...
POST: 2013-02-17T00:08:39+05:30
தொடக்கப்பள்ளியில் இடம் பிடிப்பதற்காக பை நிறையத்தொகை எடுத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.பள்ளிகள் பணம் பறிப்பதையே ஒரு தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.இந்த அழகில் அரசுப்பள்ளிகளில் இடம் இலவசம் என்று அறிவிப்பு செய்கிறார்கள். பாழாய்ப்போன பள்ளிகளுக்கு பணத்தை கொட்டிக்கொடுக்க முடியாமல் பக்கத்தில் இருப்பவரிடம் கடன் வாங்கி அயல் நாடுகளுக்கு பறந்து போனால் அந்தச்செலவு குறைவு தான். மண நாளிலிருந்து மகன் பிறந்தால் மருத்துவம் சேர்ப்போம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இடமும் கிடைக்கிறது செலவில்லாமல் வசதியும் க ...
POST: 2013-02-14T17:29:23+05:30
இன்று காலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற அயல்நாட்டுத் தமிழிலக்கியங்கள் என்ற இரு நாள் தேசிய கருத்தரங்கில் வாழ்த்துரை வழங்கினேன். அயலகத்தமிழர்கள் குறித்து நிறுவனப்பதிப்பாக வெளிவந்தவை: 1)உலகில் தமிழும் தமிழரும்(1976) 2)தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு (1987) 3)பாரெல்லாம் பரந்த தமிழர்(1994) 4)அயலகத்தமிழ்க்கலை,இலக்கியம்,சமகாலச் செல்நெறிகள் (2001) 5) உலக அரங்கில் தமிழ்(2003) 6)உலகத் தமிழ் இலக்கி ...
