POST: 2013-04-11T14:20:45+05:30

செயலாளர் அறையில் பாம்பு படமெடுத்து ஆடுவதாக கண்ணாடி போட்ட பீசி தீப்தி கதறினாள்.உடனடியாக துணைச்செயலாளர்க்கு போன் செய்தார்கள்.அவர் சார்புச்செயலாளரிடம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில் கட்டடப்பிரிவின் பொறியாளர் கோரிக்கை எழுதிக்கொடுக்கச்சொன்னார்கள்.கட்டிடப்பிரிவில் இதற்கு முன்னிகழ்வு இருக்கிறதா என்று கேட்டு பொதுப்பணித் துறையிடம் வினவினார்கள். பொதுப்பணித்துறை ஊர்வன முதலிய விலங்கினங்களைப்பற்றி கால் நடைபராமரிப்பிடம் கடிதம் அனுப்பச்சொன்னார்கள்.பாம்பு பிடிக்க டெண்டர் விட்டு தேர்ந்தெடுக்கவேண ...

POST: 2013-04-10T15:26:02+05:30

கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார் வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார். ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால், பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார். வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார். பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார். ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார். தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார். உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார். எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர். ச ...

POST: 2013-04-09T17:36:32+05:30

ஏப்பிரல் நான்கில் நாடாளுமன்றம் கலைகிறது.ஏப்ரல்27 ம் தேதி தேர்தல்.மேத்திங்களில் புதிய தலைமையமைச்சர்.இது மலேசியா நாட்டின் காட்சி. எப்போது தேர்தல் என்று இரண்டு மாதங்களாக இரைச்சல்.ஆரூடக்காரர்கள் அரசியல் வாணர்களின் வீட்டில் அடைக்கலம்.திருப்பதியில் கட்சிவாரியாக தலைவர்கள் வந்து காணிக்கையிடுகிறார்கள். விடிவு என்பது வெறும் கனவு.இப்படி மக்கள் நாயகம் நடப்பதையும் காண்கிறோம்

POST: 2013-04-08T22:47:10+05:30

I am proud to pen my english translation of the scintillating poetic lines of our Great Bharathiyar instantly in english and which was approved and printed and uploaded in website for the policy note for Micro,Small and Medium Enterprises Department recently. “குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம் கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம் ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம் உலகத் தொழிலனைத்தும்முவந்துசெய்வோம் Let us make umbrellas and ploughshares; Let us make gunnies and nails of iron.. ...

POST: 2013-04-07T18:49:13+05:30

அமெரிக்கா நாடு, 1900 ஆண்டின் தொடக்கம் முதல் அதன் நடுப்பகுதி வரையிலான கால அளவில், இன்றைய இந்தியாவிற்கு இணையான சில சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்தது. இந்தக் கால அளவில், அமெரிக்கா, உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார வளம் பெற்ற நாடாக முன்னேறத் தொடங்கியது.

POST: 2013-04-05T17:03:26+05:30

தமிழ்க்கண் நான்கெழுத்துக்கு மேல் ஒரு சொல் வருவதில்லை. அதுவும் ஆயிரத்துக்கு ஒன்று வருவதும் அரிது. ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்துக்களால் ஆகிய சொற்களே மிகுதி. நான்கெழுத்துச் சொல் வரின் பெரும்பாலும் உகர ஈற்றால் முடியும். பிற ஈறு அருகி வரும். தொல்காப்பியம் எழுத்துப்படலப் பேருரை இலக்கணச் செம்மல் இராமசுப்பிரமணியன் கருத்துரை

POST: 2013-04-05T16:16:54+05:30

62 Englishman names in chennai- ------------------------------------- Adams Street (Washermanpet) Anderson Road (Ayanavaram) Austin Nagar (Alwarpet) Ballard Street (Perambur): Bamford Road (Ayanavaram) Binny Colony (Madhavaram) Bishops Garden (RA Puram) Branson Garden Street (Kilpauk): Clemens Road (Vepery) Cox Street (Park Town) DeCaster Main Road (Ayanavaram): Demellows Road (Ayanavaram): Doomingkuppam (San Thome) Dooming Street (San Thome): Duncan Road (Ayanavaram) Edward Park Road (Choolai) ...

POST: 2013-04-03T22:26:44+05:30

அந்தமான் தீவில் தென்னை மரத்திட்டாக இருந்த பகுதியை நட்பின் பரிசாக நேரு பெருமகனார் மவுண்ட் பாட்ட்ன் பெருமாட்டியாருக்கு பரிசாக அளித்தாராம்.எவர் வீட்டுப்பொருளை எவர்க்கு எப்படி கொடுப்பது, இதே வகையில் தான் திருமதி பண்டார நாயகவிற்கு திருமதி இந்திரா காந்தியார் நட்புப்பரிசாக கச்சத்தீவை விட்டுக்கொடுத்தார் என்று அரசியல் தலைவர் இல கணேசன் இன்று மாலை பேசியிருக்கிறார்...

POST: 2013-04-03T16:48:22+05:30

மீண்டும் மீண்டும் நான் சொல்வது தமிழ்ச்சொற்கள் மூன்றெழுத்தில் முடிய வேண்டும்.பல்லாயிரத்தில் ஒரு சொல் தான் நான்கெழுத்தில் வரும்.இனிய ஒலி நயமுடைய எழிலார்ந்த சொற்களை தெரிவு செய்ய வேண்டும். உலங்கூர்தி(Helicopter) என்பதை நெல்லை சு முத்து அவர்கள் திறுகூர்தி என்கிறார்கள். திகிரி என்றால் போதும் என்று இளமுருகனார் சொல்கிறார் சிவிவூர்தி,சுழலி ஊர்தி என்ற சொல்வழக்கமுண்டு. உலங்கு என்பது நான்கெழுத்து தமிழ் மீது கசப்பு வளர்வது இவ்வாறு தரக்கூடாது என்பதனால் சீன சொற்கள் எல்லாவற்றையும் இரண்டு அசைகளுக்கு மேல் ...

POST: 2013-04-03T16:36:53+05:30

நச்சுக்காற்று வெளியிடும் ஆலைகள் சுற்றுப்புறத்தை பசுமையாக்கி அதனை நடைமுறைபடுத்தும் மாசு வாரியத்திடம் பல கோடி ரூபாய் ரூபாய் வழங்கச்சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிடுகிறது. பத்தாயிரம் மரங்களும் நச்சுக்காற்றை வீழ்த்தும் கொடிகளும் நாழிகைக்கு ஒரு முறை நறுமணக்காற்றை வீச வைப்பதும் செய்த பிறகு தான் எந்தவொரு ஆலைக்கும் உரிமம் பெறவேண்டும் என்று சட்டம் நீட்டுவோர் எழுதவில்லையே என்று அறிஞர்கள் அழுகின்றனர்