தோல்விகளும்,துயரங்களும், ஈடேறாத கனவுகளும்,எதிர்பாராத முடிவுகளும் அடிக்கடி ஏக்கப்பெருமூச்சு விடச் செய்த சூழலிலும் 95 வயாதாகிய தொண்டு கிழமாக இன்றோ நாளையோ மூச்சு நிற்கும் என்று தெரிந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று மூதறிஞர் இராஜாஜி கூறினார். உதடு உதிர்த்த வெறும் சொற்களா,உண்மையானவையா? எதிரே இருப்பவர்களுக்கு நான் சொல்லிக்காட்டும் ஏளனமா என்று விளங்காத புதிராக மூதறிஞர் எழுதுவது அவருடைய திறன் மிக்க கூர்மையை காட்டுவது என்று சாரம் அடங்கிய கட்டுரையை மேனாள் மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண ...
POST: 2013-02-11T23:41:52+05:30
அரசியலில் தன் கருத்துக்களை கடிதங்களாக அன்றாடம் எழுதுவதை தன் கலையாக வளர்த்துக்கொண்டவர்கள் அண்ணல் காந்தியடிகளும் மூதறிஞர் இராஜாஜியும் ஆவர். கட்சிக் கொள்கைகளை வளர்ப்பதற்காக தம்பிக்கு என்ற கடிதத்தொடரை பேரறிஞர் அண்ணா தொடங்கினார். மூதறிஞர் அண்ணலுக்கு முப்பது ஆண்டுகளாக அஞ்சல் அட்டையில் அடக்கும் ஐந்து வரிகளாகவும் அதிகம் போனால் இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதங்கள் முடிந்தன நல்ல வேளை எழுதத்தெரியாதவர் பலராகி விட்டதாலோ அல்லது விரலைத்தொட்டு குறுஞ்செய்தி அனுப்பும் நவீன சிற்பிகளாக இன்றைய கால முறைகள் மாறி வ ...
POST: 2013-02-10T23:46:00+05:30
இலண்டன் மாநகரில் மட்டும் 153 மொழிகள் பேசுகின்றனர்.வணிகத்திற்கு வந்த போலந்துக்காரர்கள் போலந்து மொழிக்கு வாழ்வளித்தற்காக மூன்று முறை பிரதமராக திகழந்த டோனி பிளேர்க்கு விருதை வழங்கி இருக்கிறார்கள். அகதிகளாகவும்,அலுவலக அடிமைகளாகவும் வாழும் தமிழர்களின் மொழி கணக்கில் வரவேயில்லை,அறிஞர் பெருமகன் போப்பின் புதை குழி அங்கே தானே இருக்கிறது?
POST: 2013-02-10T14:20:07+05:30
தமிழில் அயற்சொற்களை கலக்கக்கூடாதென்று மறைமலையடிகள் இயக்கம் நடத்தினார்,பாவாணர் பாடம் நடத்தினார்.விஸ்வரூபம் திரைப்படம் ஆங்கிலம்,இந்தி,அராபியம்,அக்ரகாரத்தமிழ், கவிப்பேரரசின் தமிழும் கலந்திருக்கிறது. இதைப்பார்த்தவர்கள் இசுலாமிய எதிர்ப்பை மட்டும் சுட்டிக்காட்டியிருக்க்கிறார்கள். விஷ ரூபத்தில் என்ன விளைவுகளைச்செய்யலாம் என்பதற்கு வெண்புறாவின் காலில் விஷத்துண்டுகளை கட்டலாமென்று இளைஞர்களுக்கு தகவல் தரப்படுகிறது. அதேப்படத்தில் இசுலாமியர்களின் எதிரி மொழியாகிய ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறவரின் காலை உட ...
POST: 2013-02-06T22:33:58+05:30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று காலை நூற்றுக்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வியில் தமிழ்மொழிக்கற்பித்தல் அணுகுமுறைகள் என்ற மொழியியில் பயிலரங்கின் தொடக்க விழாவில் வாழ்த்துரை வழங்கினேன்.
POST: 2013-02-03T20:21:53+05:30
Green-Brownfield Port: பண்படுத்தப்படாத பயனுக்குரிய பசுமை வாய்ந்த துறைமுகப்பகுதி
POST: 2013-02-03T12:51:09+05:30
அரசின் நடைமுறைகள் ஆங்கிலத்திலேயே செழித்திருக்கும் நிலையில் ஓராண்டு முயற்சியாக தமிழ்நாடு தேர்வாணையம் வழியாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது. பேரறிஞர் அண்ணாவின் நினைவும்,மொழிபெயர்ப்பின் உணர்வும் ஒன்றாவது ஒரு வகையில் பொருத்தமாகவே இருக்கிறது. பேரறிஞர் அண்ணாவின் முதல் பேச்சே மொழி பெயர்ப்பாளராகத்தான் தொடங்கியது.
POST: 2013-02-02T22:20:34+05:30
காந்திய நெறியாளர் மாருதி ராவ் நடத்திய மாணவ மாணவியர் பரிசளிப்பு விழாவில் இன்று காலை தக்கர் பாபா வளாகத்தில் கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகளைப் போற்றி உரையாற்றினேன்.
POST: 2013-02-01T22:49:20+05:30
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று மாலை ஆய்வு மாணவர்கள் மத்தியில் தமிழ் வளர்ச்சி அரசு செயலாளர் தலைமையில் உரையாற்றினேன்.
POST: 2013-01-31T07:15:48+05:30
மலையேறுவது போல தமிழ் நிலையேற வேண்டிய சூழல் உள்ளது.பாதிப்படி ஏறினோம் என்பதால் துவக்கம் தொலைந்து தொடக்கம் மலர்ந்தது!விமானம் விழுந்து வானூர்தி வரம் பெறுகிறது. முனையங்கள், புறமுகப்பு,பதிவுக்கூடங்கள்,பாதுகாப்பு நலன் கருதி போன்ற சொற்கள் இந்திய வானூர்தி ஆணையத் தலைவர் வெளியிட்ட அழைப்பிதழில் காண முடிந்தது.
