POST: 2012-12-29T09:42:46+05:30

கர்னாடக இசை மூவர் போலவே ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடிய தமிழிசை மூவரை சீர்காழி மூவர் என்று கூறுகின்றனர். சீர்காழி அருணாசல கவிராயர், சீர்காழி முத்துத்தாண்டவர், சீர்காழி மாரி முத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் பாடிய கீர்த்தனைகளை நாடு நன்றாக அறியும்.

POST: 2012-12-22T07:08:43+05:30

விசயநகர வேந்தர் ஆட்சியில் தெலுங்கு மொழி முதன்மைப்பெற்றிருந்ததால் தமிழ்மக்களும் தெலுங்குக் கீர்த்தனைகளை எழுதி உருக்கமாகப் பாடினர். திருவையாற்றுத் தியாகபிரம்மம், திருவாரூர் முத்துசாமி தீட்சிதர், திருவாரூர் சாமா சாஸ்திரி முதலியோர் கர்னாடக இசை மூவர் என்று இசைவானர்கள் தொழுது போற்றுகிறார்கள். இவர்கள் எழுதி சாகித்தமாகிய கீர்த்தனைகள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்தவையாகும்.

POST: 2012-12-21T09:46:17+05:30

இசையென்றால் தமிழில் புகழ் என்றும் ஒரு பொருள். இசையில் அமைந்த நெகிழ்ச்சி, உருக்கம், கனிவு இவைகளைக்கொண்டே கீர்த்தனைகள் பிறந்தன...

POST: 2012-12-20T16:39:03+05:30

தலைவனுக்கு வாய்த்த தலைவி தலைவன் ஆண்டோ பீட்டரை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு (9.6.2012)அழைத்துக் கொண்டு போன நாள் நினைவிற்கு வருகிறது. பீட்டர் கனவு நிறைவேறுமோ என்று நினைத்தோம்? நினைத்ததை தலைவி ஸ்டெல்லா நேற்று(19.12.2012) முடித்துக்காட்டியிருக்கிறார். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் நிறைவேறியதைக் கேட்டு மனம் மகிழ்கிறது...

POST: 2012-12-20T08:27:26+05:30

இசை வளர்ச்சி ஒரு நாட்டின் கலை வளர்ச்சியின் ஆணிவேராகும். இசை உணர்ச்சியில்லாதவன் இரக்கமற்ற கொடுஞ்செயல்களைச்செய்வான் என்பது ஷேக்ஸ்பியரின் பொன்மொழியாகும்!

POST: 2012-12-18T15:13:47+05:30

மரங்களைத் தன் உறவாக மதித்து வாழும் அருமை கென்யாவின் வங்காரி மாத்தாய்ப் போல பல கோடி மரங்களை வளர்ப்போம்... காடு வளர்ப்போம் என்பது பாரதியாரின் பொன்மொழி!நாடு எல்லா வகையிலும் வளம் அடைக!

POST: 2012-12-16T17:18:59+05:30

இன்று காலை இலயோலா கல்லுரியில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் சீரிய முயற்சியில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள்,செய்தித்துறையின் அரசு செயலர் தலைமையில்,மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முன்னிலையில் வாழ்த்துரை வழங்கினேன்.

POST: 2012-12-15T22:43:34+05:30

இயற்கையோடு இசைந்த வாழ்வு என்பதெல்லாம் வெறும் ஏட்டு வரிகளாகச்சென்றுள்ளன. அறிவியல் புதுமை ஆக்கம் செய்தாலும் மக்களினப் பெருக்கமும் நாகரிக நெருக்கமும் செயற்கை வாழ்வை நம்மிடையே கணந்தோறும் வளர்த்துள்ளது. வனங்களின் அழிவு வான்மழையைக் குறைக்கும் வாழ்வாதரங்களைச்சீர்குலைக்கும்.

POST: 2012-12-11T15:04:25+05:30

நெருப்புப்பந்தாக விழுந்த உலகம் குளிரக்குளிர கல் தோன்றியது.கல் கரைந்து மண் தோன்றியது.மண்ணில் மரங்கள் வளர்ந்தன,மரங்கள் வரங்களாயின.வனங்களில் விலங்குகள் திரிந்து வரலாயின.மெல்ல மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த பாலபாடம்.மக்களாகிய நமக்கு முந்தைய மூதாதையினமான விலங்குகள்,மரங்கள்,செடி கொடிகள் அமைந்தன.எனவே மரம் நமக்குக் கிடைத்த வரம்!

POST: 2012-12-07T13:25:03+05:30

கலைமாமணி விருது பெற்ற பிறகு தன் பேரனுக்கு கடையாணி வேண்டும் என்பதற்காக பதக்கத்தையே உருக்கிவிற்று தந்த உத்தம பெண்மணி டி.பி.இராஜலட்சுமி வாழ்க்கையில் சோர்வடைந்து 1964-ஆம் ஆண்டில் மறைந்தார். கலை உலக வாழ்க்கை என்பது பளிங்குக் கண்ணாடியில் நடக்கும் பரதநாட்டியத்தைப் போன்றது. கண்கட்டி கயிற்றில் நடக்கும் வித்தையாகவும் ஒரு காலத்தில் இருந்தது. இன்று கல்வியும், கலையும், தேசியமும், மொழிப்பற்றும், அறிவாற்றலும் ஒன்றாகக் கலந்து திரை உலகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஏன் நம் தமிழ் நாட்டுக்கே தலைவர்களைத் தந் ...