POST: 2012-11-25T10:18:34+05:30

மருத்துவமாமணி டாக்டர் மனோகரன் புகழ் வளர்க! வாழ் நாள் சாதனையாளர் விருது தங்கள் மணிமகுடத்திற்கு வைரக்கல் பணிந்து வாழ்த்துகிறேன்

POST: 2012-11-22T08:36:44+05:30

பாட்டும் தொகையும் எனப் பாராட்டப்பெறும் பழங்கருவூலங்களாகிய தொகை நூல்களுள் பொலிவாலும் அளவாலும் புலமையாலும் புனைதிற வளமையாலும் புகழோங்கிய சான்றோர் செய்யுள்கள் அடங்கிய நற்றிணை இயல்பாகவே அடையேதும் பெறாமல் முதன்மை நிலையில் நல் என்னும் புகழ்ச்சொல் ஏந்திய பெருமிதம் பூண்டதாகும். குறுகிய அளவுடைய பாடல்களைக் குறுந்தொகை என்றும் நெடிய பாடல்களை நெடுந்தொகை என்றும் குறித்த பெருமக்கள் அளவு குறித்த சொல்லாகவே நல் என்பதை இணைத்துக் கருதினார்கள்போலும்!

POST: 2012-11-21T22:17:50+05:30

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர்: 1.சங்க காலம் (கிமு 300 முதல் கிபி 300 வரை) 2.சங்கம் மருவிய காலம் (கிபி 300 முதல் கிபி 700 வரை) 3. பக்தி இலக்கிய காலம் (கிபி 700 முதல் கிபி 1200 வரை) 4. மையக் காலம் (கிபி 1200 முதல் கிபி 1800 வரை) 5. தற்காலம் (கிபி 1800 முதல் இன்று வரை)

POST: 2012-11-20T21:34:42+05:30

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு என்பது வலைத்தளத்திற்கு பொருந்தி வருகிற குறளாகும். You Create a magic world by a mere touch என்ற Walt Whitman கனவு வரிகளாகும்

POST: 2012-11-19T16:59:04+05:30

Dr CN Deivanayagam,noteworthy medical docto,r translator of Medical terms into Tamil,a promoter of ancient Tamil Health care system Siddha for HIV/AIDS, and President of Thamizhar Panpattup Perumanram,Secretay Generals of the World Tamil Confederation passed away today.

POST: 2012-11-18T18:14:23+05:30

காலையில் நடந்தவைகளை தெரிந்து கொள்வதற்கு ஒரு காலத்தில் 24நாட்கள் ஆயின.இப்போது நடப்பவைகளை நாம் உடனே படிப்பதற்கு உரிய வகையில் நிகழ்வுகள்,படங்கள்,விவரங்கள்,தகவல்கள் அனைத்துமே உடனக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது.இதைத்தான் ஒளி வேகம் என்பார்கள்.

POST: 2012-11-17T13:12:44+05:30

உலகத்தில் சில புரட்சிகள் நடந்துள்ளன:தொழில் புரட்சி,பசுமைப்புரட்சி என்பவைகளைக் குறிக்கலாம். இப்போது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே விஸ்வரூபம் எடுத்து நம்மை நாள்தோறும் வியப்பின் விளிம்பிற்கு அழைத்துச்செல்கிற புரட்சியைத்தான் ஊடகப்புரட்சி,தகவல் புரட்சி என்கிறோம். ஊடகத்துறையில் கணத்திற்கு கணம் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.கணினி மடிக்கணினியாக மாறி,மடிக்கணினி கைக் கணினியாக சுருங்கி கைக்கணினி கை பேசி களஞ்சியத்துக்குள் அடங்கி விட்டது. LKG,UKG போய் கைபேசியில் நவீன ஊடக ஒளிக்கதிர்கள் 3G,4G என்ற Le ...

POST: 2012-11-15T21:10:23+05:30

ஆசிய நாடுகளான சீனம்,ஜப்பான், பிலிப்பைன்சு,இந்தோனேசியா,இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஆங்கில ஆட்சியனரால் சூட்டப்பட்டன.ஆனால் பர்மா நாட்டை படைத்துறையினர் கைப்பற்றியப்பிறகு மக்கள் வழக்கில் இருந்த இலக்கியப்பெயர் என்று காரணம் காட்டி பர்மாவை மியான்மர் என்று 1988 ல் மாற்றி விட்டார்கள். எல்லா இனத்தவரும் சுட்டுகிற பொதுப்பெயர் என்று காரணம் கூறினாலும் பர்மியர் இனத்தவர் வாழந்த நாடு பர்மா என்று ஆங்கிலயே ஆட்சியினர் அழைத்ததில் எனக்கு குறையேதும் தெரியாததனால் நான் பர்மா என்றே குறிப்பிடுவேன்.இது கூட பரவா ...

POST: 2012-11-14T20:52:38+05:30

உலகத்தலைவர் மண்டேலா, அண்ணல் காந்தியடிகளிடமிருந்து விடுதலைப்போராட்டத்திற்கு எழுச்சிப்பெற்றார் என்பது பொதுவான கருத்து. அவருக்கு நேரு பெருமகனார் மீது பெருமதிப்பு இருந்ததாம். காந்தியடிகள் வாழ்க்கையில் எப்போதும் பணிந்து இருந்தவர்,எனினும் கொண்ட கொள்கையில் இரும்பு மனத்தோடு இருந்தார்.எதிர்த்து மோதுவதில் ஆர்வம் காட்டியதில்லை,ஆனால் மன்னவனே எதிரில் வந்தாலும் அவரை புறந்தள்ளி விட்டுப்போவதில் நேரு எப்போதும் துணிந்த மனத்தோடு இருந்தவர். பல்கலைக்கழகத்தில் நேருவின் பேச்சைக் கேட்ட மாணவனாக கோர்பசேவ் இருந்ததாகவும ...