வேதாந்தம் என்பது அத்வைதக்கொள்கை.வேதம் என்று சொன்னால வெட்டப்பட்ட குழி என்று பொருள்.கை வைத்தால் நண்டுகளும்,நத்தைகளும் தான் கிடைக்கும். இந்த குப்பைக்கூளங்களை கொண்டு போய் அமெரிக்காவில் கொட்டி விட்டாரே.அவரால் அமெரிக்காவின் தூய்மை கெட்டுவிடும் என்று ஒரு முறை தந்தை பெரியார் பேசினாராம்.துறவி விவேகானந்தாவைப்பற்றி இப்படி பேசலாமா என்று பலர் எதிர்த்தனர் வெள்ளையர்கள் இரண்டு பேர் அவரிடத்தில் இதுப்பற்றி பெரியாரிடம் பேச வந்தார்களாம்.வெண்தாடி வேந்தர் விருப்பத்தோடு வரவேற்று வாங்க துரை என்று எழுந்து கும்பி ...
POST: 2013-01-24T13:15:42+05:30
தாழ்வு மனப்பான்மை என்பது தலைகனத்தைத் தரும் தமிழன் என்று சொல்லடா;தலைக்கனத்தோடு நில்லடா!என்று பலர் தவறாக படித்து விட்டார்கள் தீப்பெட்டி கேட்டதாம் என்மீது உராய்கிறாயே ஏன் நீ மட்டும் எரிந்து பொடியாகிவிடுகிறாய் என்று தீக்குச்சியிடம் சொன்னதாம் .தலைக்கனம் உடையது இப்படித்தான் அழியும்...
POST: 2013-01-23T16:25:41+05:30
அடிக்கடி நண்பர்கள் சூழ அமர்ந்திருப்பார் என் தந்தை,அவருக்கு ஆயிரம் சிந்தனைகள் எந்த நாட்டைப்பிடிக்கலாம் என்பது போன்ற மாவீரன் அலெக்சாண்டரின் மனம். வரும் நண்பர்கள் எல்லாம் தளபதிகளாக நிற்பார்கள்.வருகிற ஒவ்வொருவரின் உடலிலும் தாங்க முடியாத தழும்புகள்,மனவலிகள்... இப்படிப்பட்ட நெருப்புத்துண்டுகளை யாரால் அணைக்க முடியும்?ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீபந்தத்திற்கு இந்த தீக்குச்சிகளும் சேர்ந்து எரியத்தான் வேண்டும்.
POST: 2013-01-18T16:37:33+05:30
ஒரு ஊரில் பத்துப்பேர் இருந்து ஐந்து பேர் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்.மீதிப் பாதி பேர் வேலை செய்வார்கள் என்று நினைப்பார்கள் அந்தப் பாதி பேர் நாம் வேலை செய்வதால் எஞ்சிய பாதி பேர் தான் பலன் அடைவார்கள் என்று எண்ணி வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் போது தான் தேசம் படுகுழிக்கு தள்ளப்படுகிறது என்பது பொருள். இப்படி தள்ளித்தள்ளித் தான் மீள முடியாத பாதாளத்தில் வீழந்துக்கிடக்கிறோம்!
POST: 2013-01-18T15:14:40+05:30
மகளிரின் மாட்சியைப்பற்றி பேசத்தொடங்கும் போதே மெல்லியள் என்று எண்ணாதீர்கள் சோர்விலாத பெண் தற்காத்து என்று திருவள்ளுவர் தொடங்குகிறார் இன்று தற்காப்பு என்று மகளிர்க்கு பேசுபவர்கள் இதை கருதிப்பார்க்க வேண்டும்
POST: 2013-01-18T15:05:59+05:30
தாய்வான் நாட்டில் தமிழ்ச்சங்கம் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. சீனக்கவிஞர் யூஷி 5.1.2013 தொடங்கி வைத்திருக்கிறார். தமிழுக்கு சீனம் சூட்டும் வைர மாலை என்று அழைக்கலாம். கவிஞர் யூஷி அறிஞர் அப்துல் கலாமின் நண்பர் என்ற பெருமையும் வாய்ந்தவர். மங்கோலியா நாட்டின் இலக்கிய விருது பெற்ற மாட்சியுடையவர் அயல் நாட்டில் இப்படி ஒரு அதியமான் இருக்கிறார்
POST: 2013-01-12T18:12:15+05:30
வரலாற்று மாந்தர்களையும் அந்நாளைய வாழ்வியல் முறைகளையும் பொருத்தமுறப் புனைந்து வரலாற்றுக் கதைகளைத் திருத்தமுற எழுதுவதில் கதை வேந்தர் கல்கி அவர்களை நாடு எப்போதும் நன்றியோடு போற்றும். பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய மூன்று நூல்களும் சோழ பல்லவர் ஆட்சியின் மாட்சியையும் கலைச்- செழிப்பையும் நம் கண்முன்னால் காட்டும் வரலாற்று வண்ணம் பூண்ட ஈடற்ற காவியங்களாகும். மாமல்ல புரத்துக்கு மகிழ்வுலாச் செல்லும் எவருக்கும் சிற்பக்கலையரசரின் செல்வியாகிய சிவகாமியின் சதங்கை ஓசை செவிகளில் ...
POST: 2013-01-11T16:02:24+05:30
குறுந்தொகைத் தோன்றிய காலத்தில் வாங்கனுடைய மொழியாக இருந்து புறநானூற்றுக் காலத்தில் சிறந்த செல்வாக்கைத் தேடி தொல்காப்பியர் காலத்தில் திசைச்சொல்லுக்கு பின்வைத்து எண்ணப்பட்ட வடமொழி திருமுறை ஆசிரியர் காலத்தில் திசைச்சொல்லை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது. தொல்காப்பியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற வரிசையில் வடமொழிக்கு நான்காம் இடத்தையே கொடுத்தார். திருஞானசம்பந்தர் காலத்தில் “தென் சொல் விஞ்சமர் வடசொல் திசைச்சொல்“ என்று சொல்லும்படி திசைச் சொல்லைப் பின்னே தள்ளி வடசொல் முன்னே வந்த ...
POST: 2012-12-30T23:56:52+05:30
பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பழுத்தப்புலமையும் நாடக இலக்கியத்தில் தோய்ந்த பெருமிதமும் கொண்டு அடக்கத்தோடு வாழ்ந்து இன்று அடங்கி விட்டார் பேராசிரியர் முனைவர் இரா குமரவேலன். திருக்குறள் வ ஊ சிதம்பரனார் உரையை வனப்புற வெளியிட்ட அழகும், கடைசி மூச்சு நிற்கும் போது சாகித்ய அகாதமி வெளியிட்ட ஒரிய மொழி சிறுகதை தொகுப்பு கனவுகள் என்ற நூல் ஈரம் காயாமல் இருந்தது.எழுதி முடித்த இரண்டு நூல் அச்சில் உள்ளன. ஆன்று அவிந்து அடங்கிய சீர்திருத்தக் கொள்கைச் சான்றோராகிய முனைவர் குமரவேலர் தந்தை நூலகராகவும் தாயோ ...
POST: 2012-12-30T08:34:21+05:30
யாரோ இவர் யாரோ என்ற புகழ்வாய்ந்த கீர்த்தனை சீர்காழி அருணாசல கவிராயர் பாடிய அற்புதமானப் பாடலாகும். ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண ஆயிரம் கண் வேண்டாமோ என்ற கீர்த்தனையைப் பாடாத இசைமேடைகளே இல்லை. இது சீர்காழி முத்தத்தாண்டவர் எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஒரு பாடலாகும். காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே என்ற உன்னதமானக் கீர்த்தனை சீர்காழி மாரி முத்தாப்பிள்ளை இயற்றியதாகும்.
