The earliest Hindi-English Dictionaries was compiled and printed 1) A Dictionary of Hindustani Language-London-1773 2) A Dictionary:Hindustanee and English-Calcutta-1808 3) A Dictionary:Hindustani and English-London-1817 4) A Dictionary: Hindustani and English-London-1848 5) A Dictionary of Urudu,Classical Hindi and English-London 1884 6)Bhargavas Standard Illustrated Dictionary of the Hindi Language-Banares-1946 7)Small sized Hindi-English Dictionary of Common words-Ministry of Education,Govt o ...
POST: 2012-11-04T17:28:46+05:30
தொடக்க நிலையில் ஏழாண்டுக்குள் முதல் மூன்று வகுப்புக்குள் நினைவுப்பதிவு பிள்ளைகளுக்கு பசுமையாக அமையும். நம்முடைய மாணவச் செல்வங்களைப்போலவே அயர்நாட்டு மாணவர்களும் வலது கை பழக்கத்தையும் கணக்கு நுணுக்கத்தையும் இயல்பாக அறிகிறார்கள். மழலையர் பள்ளிக்கூடங்கள் மலர்வனமாக திகழ்வதை கண்டதோடு குழந்தைகளிடம் காணப்படும் புதியன புனைவும் இடைவிடாத பரபரப்பும் எவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது என்பதையும் அறிந்து வியந்தேன்...
POST: 2012-11-04T00:26:44+05:30
இன்று மாலை ஆந்திர வளாகத்தில்(Andhra Club)கணித்தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இயக்குனர்களான பொறிஞர் பொன்னவைகோ,பொறிஞர் சங்கரநாராயணன் அவர்களோடு இந்நாளைய இயக்குனர் பொறிஞர் நக்கீரன் கணித்தமிழ்ச்சங்கத்தின் இலக்கு,நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று நுட்பமாக உரையாற்றினார்கள். அவர்களின் உரையில் தமிழில் நிரலிகளின்(Softwares) எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது,கணினியில் தமிழ் வளர்ச்சி ஏன் இன்னும் எட்ட வேண்டிய இலக்கை அடைய முடியாமல் தத்தளிக்கிறது என்று கடந்த 13 ...
POST: 2012-11-03T14:02:31+05:30
இன்னறைய குடியரசுத்தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி அவர்கள் எங்கள் குடும்பம் ஆசிரியர் தலைமுறையைச்சார்ந்தது என்று கூறியதோடு தானும் ஆசிரியராகவே மாற விரும்பியதாக நெகிழிந்து குறிப்பிட்டுள்ளார். இளம் பருவத்தில் தாய் தந்தையர் அன்றி உலகியியலைப்பற்றி ஒன்றும் தெரியாத குழந்தைகளுக்கு நல்லியல்புகளையும்,நல்லுணர்வுகளையும் கற்றுத்தருவதிலே தான் மொழியின் அரும்பு நிலை தொடங்குகிறது.களிமண்ணாக அமைவதை, நாம் கருதும் கலை வடிவங்களாக மாற்றுவது ஆசிரியர்களின் மாறாக் கடமையாகும். இப்போதைய அறிவியல் வளர்ச்சியில் எழுத்துக்களை கூட ...
POST: 2012-11-01T20:13:59+05:30
Today afternoon spoke in English amidst Odisha and Bengaluru Jawahar Bal Bhavan School students who had performed their cultural dances in Museum Theatre on hehalf of National week celebrations conducted by Culture Department of Tamilnadu Government. Every Thursday between 10.30AM-12 Noon Culture Department conducts various cultural performances in Museum Theatre,wheter it shines or rains from July 26th onwards...Check out and do attend and entry is free....
POST: 2012-10-31T04:28:11+05:30
நேற்று மாலை ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் பேராசிரியர் மறைமலை அவர்களும் என் தந்தை ஔவை அவர்களும் Interantional Academy of Tamil Research (IATR) அமைப்பின் வழியாக உலகத் தமிழ் மாநாடுகளை தொடங்கி வைத்த பேராசிரியர் தனிநாயக அடிகாளாரின் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழாவில் உரையாற்றினார்கள். ஈழப் பேராசிரியர்,13 மொழிகளை அறிந்த பன்மொழிப்புலவர்,உலகத்தமிழ் என்ற சொல்லாட்சிக்கு செயல் வடிவம்,தமிழர்கள் சென்று வராத சிலி,பெரு,தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வந்த தமிழ்த்தூதர். அவர் புகழ் வாழ்க!நன்றி மறவாத் தமிழர ...
POST: 2012-10-30T15:52:17+05:30
இராவணன் ஓர் இணையற்ற வீரன் என்று பஞ்சாபிய ஆதி மக்கள் தம்மை வான்மீகியின் வழி முறையினர் என்று சொல்லிக்கொண்டு இராவணனை வழிபடுகின்றனர்.அதே நேரத்தில் பஞ்சாபிய சிந்தனையாளர் மன்மோகன் சிங்கு இராவண உருவப்பொம்மையை வீழ்த்தி வில்லை வளைத்துக்கொண்டிருக்கிறார். இராமனக்கும் இராவணனுக்கும் பஞ்சாப் தான் தாயகமென்று இப்போது தெரிகிறது. சேது பாலம் இராமர் கட்டியது இல்லை.இராமர் பெயரை பொய்யாக சூட்டிக்கொண்ட நமது ஊர் ரங்கசாரியார் கட்டியிருக்க வேண்டும்! ஆதிகுடிகள் இராவணனை மகாத்மா இராவணன் என்கிறார்கள்; மகாத்மா காந்தியோ இர ...
POST: 2012-10-29T21:22:20+05:30
இன்று மாலை எழுமூரிலுள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் அரசு குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களுக்கு ஆட்சித்தமிழ் பயிலரங்கத்தில் கலைச்சொல் நுணுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்
POST: 2012-10-29T14:02:37+05:30
அதிகச் செலவில் கட்டப்பட்டு தகுந்த நிர்வகிப்பு இல்லாமல் கிடக்கும் கட்டிடங்கள் நம் நாட்டின் சோக வடிவங்கள். கட்டிட வடிவமைப்பாளர்களின் குறையல்ல. இது நமது குறை. பயன்படுத்துவோர் குறை. சுவர்களுக்குக் காது உண்டு என்கிறார்கள். ஆனால் நமது சுவர்களோ கறைபடிந்து எச்சில் ஒழுக இழிவாகக் காட்சி அளிக்கும் நமது விமான நிலையங்களுக்கு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு புதிய ஆய்வு மையங்களுக்கு கட்டிட வடிவமைப்பு இருந்தாலும் அவற்றின் கழிப்பறைகளில் நடைபாதைகளில் சிற்றுண்டிச் சாலைகளில் சமையலறைகளில் நாம் வெட்கப்படுகிற அளவுக்கு ம ...
POST: 2012-10-28T23:30:16+05:30
பாதுகாப்பது, போற்றுவது, மறுசீரமைப்பது, பராமரிப்பது என்பவை நம்மிடத்தில் முதன்மை பெறுவதில்லை. மரபுகளைக் காப்பது, கலை வடிவங்களை காப்பது ஆகியன வளர்ந்த நாடுகளின் முதன்மை நாட்டமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் இம்முயற்சிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. நமது நாட்டில் இந்த முயற்சிகள் மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனாதைகளாக கருதப்படுகின்றன. மரபு காக்கும் பணியை தொடர படித்தவர்கள் விரும்புவதில்லை...
