POST: 2012-08-30T21:57:36+05:30

The first translations of Shakespeare’s plays were made in Bengali by Michael Madhusudhan Dutt. It is interesting to note that a street in Calcutta has been named after Shakespeare due to the euphoria of the Bengalis for the great playwright. The first English editions of Shakespeare’s play are said to have arrived only in Calcutta when it was the Capital of the Britishers.

POST: 2012-08-29T22:26:45+05:30

தொன்மையான மரபைக்காத்து வரவேண்டும்.காவியங்களோடும் மட்டுமல்லாமல் கட்டிடங்கள்,கலைப்பொருள்கள் இடிந்தவை,சிதைந்தவை, சீர்குலைந்தவைகளை போற்றிக்காத்து அந்தச்சுவடுகளை மறவாமல் பேணி வர வேண்டும் என்ற அறிஞர் முத்தையாவின் ஆய்வுப்பொழிவை இன்று மாலை கேட்டு மகிழ்ந்தேன்.ஆர்வம் கொண்ட 50 பேர் அமர்ந்திருந்தனர். இருநூறு ஆண்டுகள் எய்தாத ஈயம் படிம மாநகரம் என்ற புகழ்க்கொண்ட மலேசியா நாட்டின் பினாங்கு பெற்றிருக்கிறது. பினாங்கு என்றால் இங்கே ஈயப்புதையல் இருக்கிறது என்று பொளாகும். இந்திய நாட்டில் கண்படும் இடமெல்லாம் ப ...

POST: 2012-08-28T13:24:12+05:30

தொடக்க காலத்தில், நெடும் பெருங்குன்றமாக அகநானூற்றில் இடம்பெற்ற குன்றம், நாளடைவில் ஊராக வளர்ந்தது. சிராப்பள்ளி எனத் தொடக்க காலத்திலும், சிரபுரம் என்றும் திருசிரபுரமென்று பெயர் பெற்று வந்த ஊர், வழக்கம் போல் வடமொழிச்சார்பால் திருசிரன் என்ற புராணப்பெயர் பூண்டு திருச்சிராப்பள்ளியாயிற்று.....

POST: 2012-08-27T20:59:31+05:30

ஓடும் பிரஞ்சு தொடரியில் பிரஞ்சு மொழியில் நாம் பாடும் திருக்குறள் இடம்பெற்றது: ஆங்கிலமும் பிரஞ்சுமே உலகின் தலையாய மொழிகள் என்றும் உலக மொழியாக பிரஞ்சு மொழி அமைவதற்கு வாய்ப்பு நேரலாம் என்று அறிஞர் எச் ஜி வெல்ஸ் எழுதினார்.எனவே ஆங்கிலத்தில் எந்த நூல் வெளிவந்தால் அடுத்த கணம் அல்லது ஒத்த நேரத்தில் பிரஞ்சு மொழியிலும் மொழியாக்கம் வெளிவரும் என்பர். அந்த வகையில் பிரஞ்சு மொழியில் எட்டுக்கு மேல் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்,நூறாண்டுகளுக்கு முன்பே மொழிபெயர்க்கப்பட்டன. பிரஞ்சு கலை பண்பாட்டுக்கழகம்,புத ...

POST: 2012-08-27T13:30:39+05:30

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள் என்பர். இறைவனைப் போலவே, இறைவன் புகழ்பாடும் தமிழும் இனிக்கும். தமிழ் என்றாலே இனிமை என்றொரு பொருளும் உண்டு. அன்பே சிவம் என்பது போதுபோல் தமிழே சிவம் என்றும் கூறலாம் என்று அன்பர்கள் சிறப்பித்துப் பேசுவர்....

POST: 2012-08-25T22:10:47+05:30

எவ்வளவு முயன்றாலும் ஒரு நாட்டில் தாய் தந்தையருக்கு பிறந்த பிள்ளைகளுக்கே இன்னொரு நாட்டின் மொழியை சூழல் கருதிக்கற்று கொள்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.எனவே தாய்மொழியைத்தவிர பிற மொழிகளை அறிவதென்பது அரிதினும் அரிது! ஒரு பாடப்புத்தகத்திலும் காந்தியோ,நேருவோ எழுதியக்கட்டுரைகளை ஆங்கில நாட்டில் பாடமாக கருதியதில்லை.ஒரே அயல் நாட்டார் ஆங்கிலம் எழுத வல்லவர் என்று டாக்டர் லின் யு டாங் ஐ தான் எற்றுக்கொண்டார்கள்.நாம் மெத்தப் புகழும் பெருந்தகை நாவேந்தர் சீனிவாச சாத்திரியார் பேச்சைக்கேட்டு எந்த மொழியில் ப ...

POST: 2012-08-21T22:29:23+05:30

கண்டறியாதன கண்டேன்... கருநாடக மாநிலத்தில் காவன நகர் என்று பெரிதும் பாராட்டப்பெறும் பெங்களூர் சென்று வந்தேன். பூங்காக்களின் பொலிவை புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும்.ஒரு பன்னாட்டு கணினி நிறுவனம் பார்த்தேன்,வியந்தேன்,மகிழ்ந்தேன்.அமெரிக்கரின் திறமையைக்கண்டு புகழ்ந்தேன். ஒரு அலுவலகம் கற்பனைக்கு எட்டாத வசதிகளை பணியாளர்களுக்கு செய்து தர முடியும் என்பதற்கு சிகரமாக நிற்கிறது. ஓய்வறை,உணவறை,சாய்வு இருக்கை,நீவு நாற்காலிகள்,கழுத்துப்பிடிப்பு,தோள் மெத்தனை,கணுக்கால் நீவுகை என்று பல்வேறு முறைப்பாடுகள் பொர ...

POST: 2012-08-21T14:53:16+05:30

Bayon என்பது அங்கோரில் உள்ள ஒரு கோயிலின் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்து, அதை அப்படியே தமிழில் எழுதுமாறு, இரு மொழிகளும் நன்கு அறிந்த மூவர் கூறியது, ‘பயன்‘ என்று ஒருவரும், ‘பயோன்‘ என்று இன்னொருவரும், ‘பேயன்‘ என்று மூன்றாமவரும் எழுதினார்கள் இரு மொழிகளையும் நன்கறிந்த மேலும் மூவரிடம், இந்த மூன்று சொற்களையும் ஆங்கிலத்துக்கு மாற்றி எழுதுமாறு கேட்டதற்கு ‘Bayan‘ என்று ஒருவரும், ‘Payon‘ என்று இன்னொருவரும், ‘Peyan‘ என்று மூன்றாமவரும் எழுதினர். ஒரு மொழியிலிருந்து, அம்மொழிச் சொற ...

POST: 2012-08-21T14:44:15+05:30

சென்னைப் பல்கலைக்கழக தமிழக துறையின் சார்பில், பெரும் பேராசிரியர் புருஷோத்தம நாயுடு அவர்கள் திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கத்தை 10 தொகுதிகளாக வெளியிட்டு மணிப்பிரவாள நடையை இனிமையான தமிழ்நடையாக மாற்றித் தந்தது வைணவத்துக்குக் கிடைத்த பெரும் செல்வமென்றே கூறலாம்.