பிரஞ்சு நாட்டின் பாஸ்டலி சிறை உடைக்கப்பட்ட 1789 ல்,அந்தப் புரட்சி நாளில் இளமையோடு நேரில் பார்த்த ஆங்கில இளைஞர்கள் கோல்ரிட்ஜ்,வோர்ட்ஸ்வொர்த், சௌத்தே ஆவர்...
POST: 2012-08-07T22:52:55+05:30
நேற்று ஒரு கதைப்படித்தேன்.இராம்கியைப்பார்த்து ஒரு மந்திரவாதி தனக்கு வயது 400 என்றானாம்.நம்பாத இராம்கி மந்திரவாதியின் பக்கத்தில் மத்தளம் அடித்த சிறுவனைக்கேட்டானாம்.இப்படி பொய் சொல்கிறானே மந்திரவாதியின் உண்மையான வயது உனக்குத்தெரியுமா? என்று நான் வெளியூர்க்காரன் இரண்டு இடங்களை விட்டு இவரிடம் வேலைக்கு வந்து 600 வருடங்கள் என்றானாம்!!!
POST: 2012-08-07T22:51:17+05:30
இப்போது நமக்கு கிடைக்கும் ஏடுகள் மூன்று நூற்றண்டுகளுக்கு முற்பட்டனவாக இருக்க முடியாது.இந்த நிலையில் நம் முடிவு பெரும்பான்மையும் பிற்கால வழக்கினையே வலியுறுத்தும்.எனவே இது தெ பொ மீ அவர்கள் ஓலைச்சுவடிகளை பதிப்பித்ததுப்பற்றி 1976 ஆம் ஆண்டில் கம்பராமாயண நூல்பதிப்பில் எழுதிய வரிகளாகும்.
POST: 2012-08-06T22:22:41+05:30
பிளக்ஸ் விளம்பர பேனர் என்பதை பி.வி.சி நெகிழிப்பதாகை எனலாம்
POST: 2012-08-05T21:52:29+05:30
1.Cilappatikaram Alain Danielou's - 1968 2.The Anklet Story, Ka. Naa. Subramaniyam - 1978. 3.The Cilappatikaram Professor V.R.Ramachandra Dikshitar Saiva Siddanta Padipagam 1978 4.Silappadikaram in English by S.Krishnamoorthy MP. Birla Foundation, Kolkatta - 1996
POST: 2012-08-05T21:46:35+05:30
கம்பராமாயணம் முழுவதையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்ற பேராசிரியர் பி.எஸ்.சுந்தரம் அவர்கள் ஆறு தொகுதிகளாக மொழிபெயர்த்துள்ளார். 1.Bala Kandam - 1989 2. Ayodhya Kandam - 1991 3. Aranya Kandam - 1991 4. Kishkinda Kandam - 1992 5. Sundara Kandam - 1992 6. Yuddha Kandam (Part 1 & Part II - 1994) Department of Tamil Culture, Government of Tamilnadu, (Printed in Tamil University). தலைசிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புப் புத்தகங்களாக Ramayanam - As told by Kamban - Ayodhya Kandam - ...
POST: 2012-08-05T21:37:45+05:30
பாரதிதாசன் பாடல்களைத் தனித்தனியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தனி நூல்களாக பலர் வெளியிட்டுள்ளனர். 1.Poems of Bharathidhasan A.Dakshinamurthy - 1990 - Bharathidhasan University. 2.பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் Selected Poems of Bharathidhasan - 1991 ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. 3.Poems of Bharathidhasan ML.Thangappa - 1992 - Marxist, Periyarist, Communist Party.Malarvizhi Pandian Parisu - M.S.Venkatachalam - Indian Institute of Asia ...
POST: 2012-08-04T21:42:41+05:30
12.8.2012,ஞாயிற்றுக்கிழமை,மாலை 5.00 மணி சென்னை கம்பன் கழகம்,பட்டிமன்றம் ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபம் நடுவர் முனைவர் ஔவை நடராசன் வீழ்ச்சியிலும் நம் மனத்தைப் பெரிதும் ஆட்சி செய்வது தயரதன் மரணமே! வாலி வதையே! இராவணன் முடிவே!
POST: 2012-08-02T16:01:41+05:30
Attended breifly the Viva Voce of Ph D thesis entitled Indian Cinema and Feminine Discourse:Social and Cultural Perspectives by Mauritius Born Canadian Citizen Ms Sharina Appanna at the premises of the Institute of Asian Studies
POST: 2012-08-01T22:01:42+05:30
31.7.2012,தமிழ் வளர்ச்சித்துறையில் தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கில், அரசு அலுவலர்களுக்கு மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். இணையத்தின் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களை விவரித்தும் குறிப்பாக தமிழ் விக்கிபீடியாவை பற்றியும் நுண்மான் நுழைபுல மிக்க அண்ணல் பேராசிரியர் செல்வகுமாரின் தமிழ்த்தொண்டினையும் வரைவுகளைப்பற்றியும் விளக்கமாக இயம்பினேன். விழிகளை விரித்தே காண்பீர் வெற்றியின் நெற்றியில் தமிழே! வாழ்க இணையம்!!
