மாணிக்கவாசகரும் மகமதுயுசைனும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் விடுப்பில் சென்றிருப்பதால் ஆறு மாதங்களுக்கு உருதுப்பேராசிரியரிடம் பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு! எல்லா மொழிகளும் சமம் என்பதே உறுதியாச்சு
POST: 2012-07-30T13:01:45+05:30
அச்சு வடிவேறும் ஏடுகள் எவையும் நான்கு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது அரசாணை. கொல்கத்தா நூலகம்,சென்னையில் கன்னிமாரா நூலகம்,அரசு செய்தித்துறை இன்னும் ஒன்று நினைவில்லை.இதனை ஏற்பாடு செய்தது வெள்ளையர் ஆட்சியே!இதனாலயே கீழ்த்திசை சுவடி நூலகம் என்ற ஓர் அமைப்பு சென்னைப்பல்கலைகழகத்தில் உள்ளது. இதனைத்தொகுத்து ஆண்டு வாரியாக தமிழ்வளர்ச்சித்துறை நூலாக வெளியிட்டு வந்தது.இதன் விவரம் முழுவதும் அறிஞர் மா இராசேந்திரன் நன்கறிவார்.இதில் ஓலைச்சுவடிகளின் பெயரும்,உட்பொருள் குறிப்பும் பெற்றிந்தன. இதேப்பணியை ...
POST: 2012-07-29T20:32:51+05:30
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே. ------திருவருட்பா Father! Thou shall hear my supplication and grant it, I should love all living beings Through compassionate service, I should ...
POST: 2012-07-29T19:44:30+05:30
Yday spoke in Lioness Council meeting on Leadeship qualites in Hote Maris
POST: 2012-07-28T14:09:39+05:30
அசைந்து அசைந்து தமிழக அரசின் ஆட்சித்தேர் 4.2 இலட்சம் பக்கங்களைக்கொண்ட நூற்றாண்டு பழமையுடைய அறிக்கை,அறிவிக்கை,சட்டம், சட்ட விதிகள்,ஆணகளை தமிழ் மொழிப்பெயர்ப்பையும் இணைத்துக்கொண்டு கணிப்பொறியில் எண்மியப்படுத்தக்கருதியுள்ளனர். பாறை,ஓலை,பழந்தாள்,கையச்சு போன்ற கிழச்சாதனங்கள் முடங்கி விட்டன என்று அறியலாம்.இது தான் அறிவியலின் வளர்ச்சி! மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்த வெள்ளையர்கள் வேனிலில் குறிஞ்சி நகரங்களுக்குச்சென்று தான் பொறுப்பேற்ற மாவட்டத்தின் மக்கள்,மரஞ்செடிகொடிகள்,விலங்குகள், பழக்கவழக்கங்கள் ...
POST: 2012-07-28T13:35:22+05:30
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் இந்தக்குறளை ஆங்கிலேயர்கள் இந்தியாவோடு ஒட்டி உறவாடியதன் விளைவாக 200 இந்தியச் சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று ஆக்ஸ்போர்ட் அகராதி அலுவலக மேலாண்மை இயக்குநர் ஜோனா டேர்ன் புல் அறிவித்திருக்கிறார். சான்றாக சில சொற்கள்: Bungalow,Pilaf,Masala,Vindaloo,Bollywood,Bindi, Dhurrie,Kabadi,Crore,Lakh,Taluk,Namaskar,Airdash,Chargesheet, Prepone,Undertrial,Chillax(Chillout and Relax),Staycation(Staying at home on a Vacation),Podcast(iphone and Broadcast),BO ...
POST: 2012-07-27T18:49:30+05:30
8000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓலைச்சுவடிகளை நாகர்கோயிலில் தயார் செய்யப்படுகிறதாம் என்று 320 வயதான ஒரு பெருந்தகை தெரிவித்திருக்கிறார். கரிமச்சோதனைக்கு மும்பைக்கு அனுப்பி ஏதேனும் ஓலைச்சுவடி நறுக்கு ஒன்றாவது நாள் வரையரை செய்யப்பட்டதா என்று தொல்பொருள் ஆய்வகத்தை,கொல்கத்தா நூலகத்தை கேட்டுச் சொன்னால் ஊருக்கு உண்மைத்தெரியும். ஏற்கனவே சாம வேதத்தின் ஓலைச்சுவடி சிவபெருமானால் எழுதப்பட்டு 12000 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் என்று நாரத முனிவர் சொல்லியிருக்கிறார்.....
