POST: 2012-07-12T22:10:52+05:30

அந்தோ!அந்தோ! ஆண்டோ பீட்டரை காண்பது என்றோ! பீட்டர் என்றால் பெரும்பாறை,உன் சிகர வாழ்வு இப்படிச் சீர்குலைவதா? எங்கும் தமிழ்,எதுவும் கணிப்பொறியே என்றாயே! பொங்கும் புதுமைச்சிற்பியே! நாளும் என்னை உன் தோளில் சுமந்தாயே! பாழும் உலகத்தில் பழக்கத்தால் வீழும் மனிதர்களை விரும்பிச்சாகின்றவர்களைக்கண்டு எப்படி ஆறுதல் கொள்வது... நீயிருந்தது தமிழ்க்குடில், உன் துணையோ எல்லாச்சிறப்பும் கொண்ட ஸ்டெல்லா அண்ணியார் உனக்குப்பிறந்தவை அமுதங்கள். நேற்று வரை என்னோடு பேசினாய், நான்கு வாரங்களுக்கு முன் தஞ்சைக்கு அழை ...

POST: 2012-07-12T15:06:39+05:30

நெடுங்காலம் அரசின் மீது வெறுப்பை உமிழ்ந்தபடி வாழ்ந்தோம். கல்வியில்லாத மக்கள் அரசைக் கண்டு அஞ்சினார்கள். அரசுக் கல்லூரி, அரசு போக்குவரத்து, அரசு மருத்துவமனைகளை அறவே வெறுக்கிறார்கள். அரசுப்பணியை சோம்பலினால் பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு கல்லூரி கிண்டியில் இருந்துகொண்டு பொறியியலை எட்டாக்கனியாக இருந்தது. வறியோர்க்கு எல்லாம் கல்வியின் வாடை வரவிடவில்லை அரசின் மேடை நறுக்கத் தொலைந்தது அந்தப்பீடை நாடெல்லாம் தனியாரால் பாய்ந்தது கல்வி நீரோடை என்று பாவேந்தரின் பாடலை மாற்றி எழுதிப் பார்க்கிறேன். ...

POST: 2012-07-11T15:54:50+05:30

என் பாட்டிக்கும் நேரு பெருமகனுக்கும் உயர்ந்த கேண்மை விளங்கியது என்று உணர முடியாமல் காதல் என்று கதை கட்டுகிறீர்கள் என்று கோமான் மவுண்ட்பாட்டன் பேரன் சொல்லியிருக்கிறார். வேந்தன் அதியமானுக்கும் மாபெரும் புலவர் ஒளவையாருக்கும் இருந்த நட்பைப்போல இவ்வளவு இனிப்பான மாங்கனி என்னிடமிருந்து எலீனாவுக்கு அனுப்புகிறேன் என்று நேருவின் தொடரும் நெல்லிக்கனி ஈன்ற அதியனின் திறனும் ஏறத்தாழ ஒத்தைநிலையுடையது என்று ஏன் நினைக்க முடியவில்லை?

POST: 2012-07-10T12:53:31+05:30

உலகத்தில் உயரிய உணவுப்பட்டியல் இந்தப்பத்தையும் பரிமாற வேண்டும் என்று சொல்கிறவர்களுக்கு இட்லி தெரியாமல் போயிற்று.அது ஒன்று தான் தமிழ்ச்சொல் போல காதில் விழுகிறது. மசாலாவும் தமிழில்லை,தோசையும் தமிழில்லை,அதில் ஊறும் நெய்க்கும்,உருளை கிழங்கிற்கும் பஞ்சமில்லை!அது உணவுக்குப் பொருத்தமில்லை!!இதையெல்லாம் ஏன் எவரும் நினைப்பதில்லை!!! இத்தாலி நாட்டில் பீட்சாவும் நம்மூர் வடகறி போல நேற்று மிகுந்ததை எண்ணையில் வாட்டி எடுத்தது தான் Hot Dog!

POST: 2012-07-08T23:29:55+05:30

நெல்லும் கரும்பும் நெடுங்காலப்பயிர்கள். அமரர் உலகத்திலிருந்து அதியாமான் கொண்டு வந்ததாக பாடல் இருக்கிறது கரும்பிலும் கூட சாறு பொங்கி வழிவது வடநாட்டுக்காரர்கள்களின் கரும்பில் தான். திருவள்ளுவர்க்கு கரும்பு தெரிந்தே தவிர சர்க்கரை தெரியவில்லை. சீனிவாசன் என்ற பெயரே சர்க்கரையில் வாசம் செய்கிற கடவுளைக்குறிக்கலாம் அதிகமான இனிப்புக்கள் ரசகுல்லா,ஜிலேபி,ஜாங்கிரி,மைசூர் பாகு வடநாட்டை சார்ந்தவை.அதிகமாக தமிழக இனிப்பு அதிரசம் தான்....

POST: 2012-07-08T23:27:53+05:30

அமெரிக்காவில் ஓபாமாவின் கையெழுத்தை வாங்கிவைத்துக்கொண்டோ அல்லது நகல் தயாரித்துக்கொண்டோ மாநாடுகளில் வலம் வந்து ஒபாமா கொடுக்கச்சொன்னார் என்று நின்று கொண்டிருக்கும் சென்னை வாழ் அமெரிக்கத்தம்பதியினர் அதே போல் சங்கமாவிற்கும் முகர்ஜிக்கும் இரண்டு சான்றிதழ்களை தயாரித்து சென்னை, டில்லி வருவதற்கு தமிழ்ச்சங்கம் நிதி திரட்டுவதாக கேள்வி.ஏற்கனவே நிழற்படக்காரர்கள் ரெடி....