The poor folks who have settled in alien places with sufferings have to take care of themselves first and become tall citizens of that country than creating their own domain,when there brothers are bleeding in their own home land- Bernard Shaw
POST: 2012-07-07T14:38:00+05:30
பெருங்குடியில் ஆடி விழாவை நடத்துவதற்காக ஊர் மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் 50,000 மின் விளக்குகளை பொருத்தி வைத்து ஒளி வெள்ளமாக கொண்டாடுகிறார்கள். வீட்டில் விளக்கு எரியவில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும்.வீதிகளில் எரிந்தால் போதாதா?
POST: 2012-07-07T14:31:31+05:30
பண்டரிநாதன் என்ற பெயரில் பலசரக்கு கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் இருக்கிறான்.தெரியாமல் அவன் பெயரை பாண்டிய நாதன் என்று எழுதிவிட்டார்கள்.அவன் தனக்கு சுவிஸ் வங்கியோடு தொடர்பு இருக்குமா என்று கேட்கிறான்.பாண்டியன் பரம்பரை யார் எப்படிச் சொல்வது,தா பாண்டியனும்,பி எச் பாண்டியனும் உரிமை கொண்டாடலாம் அல்லவா?
POST: 2012-07-07T14:30:18+05:30
புரட்சித்தலைவர் தமிழுக்காக 5000 ஏக்கர் ஒதுக்குவதாக திட்டமிட்டார்,அப்புறம் அப்போதிருந்த அலுவலர்கள் தஞ்சாவூரே 5000 ஏக்கருக்கு குறைவாயிற்றே என்றதால்1000ல் நிறுத்தினார்.பல்கலை பேராசிரியர்களுக்கு வீடு கட்டித்தந்து பேயறைகள் போல யாரும் குடி போகவில்லை.பேராசிரியர்கள் தஞ்சையின் நடுவில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டார்கள் என்பது செய்தி! ஒரு பல்கலைக்கழகம் 10 ஏக்கர் போதும் என்ற விதியிருக்கிறது.மாதச்சம்பளம் கொடுப்பதற்கு திகைப்பு ஏற்படும் போது மைதானங்களை பெரிதாக வைத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அரண்மனை கட ...
POST: 2012-07-07T14:02:35+05:30
தினத்தந்தியில்-துணை குடியரசுத் தலைவர் தமிழராக வேண்டும்: ------------------------------------------------------------------------ இந்திய மாநிலங்கள் 28 ஆகும்.ஒரு மாநிலத்தைச்சார்ந்தவர் பெரும் பதவிக்கு வந்தால் அடுத்த சுழற்சி 28வது முறையில் தானே வர முடியும். சரவண பவனில் கூட நேபாளத்துக்காரன் சிற்றுண்டி வழங்குவதை தினத்தந்தி நாடாருக்குத் தெரியாதா? ஒரு தமிழன் பெயரைச்சொன்னால் குறைந்தது ஒன்பது தமிழர்கள் குழி வெட்டுவார்கள். முகர்ஜியையே பனேர்ஜி எதிர்க்கிற கதையை பார்க்கும்பொழுது நாயுடு,முதலியார், நாயக் ...
POST: 2012-07-03T15:52:46+05:30
ஔவையார்க்குப் பரிசில் தாராது அதியமான் கால நீட்டிப்புச்செய்தானாம்.அப்போது தான் ஔவையார் அரண்மனையிலேயே தங்குவார்கள் என்று கருதினான் என்பர்.
POST: 2012-07-03T15:37:41+05:30
உரிய சொற்களை உவகையோடு வழங்கிய புலமை அண்ணன் இலக்குவனார் திருவள்ளுவனுக்கு என்ற திருப்பெயர்க்கு பொருத்தமாக அமைகிறது. தன்னலமில்லாமல் தனியராக தணியாத ஆர்வத்தோடு தமிழ் வளர்க்கும் உங்களை தந்தையின் மரபை தமிழகம் நன்றியோடு பாரட்டும் என நம்புகிறேன்...
POST: 2012-06-29T14:57:49+05:30
யாரேனும் ஒரு எழுத்தாளர்,ஓர் தமிழறிஞர்,ஒய்வு பெற்ற துணைவேந்தர் போன்றவர்களை நியமிக்க முடியாமல் பிரதிபா அம்மையார் படி தாண்டி நடந்த போது திரும்பப்போய் இன்று பராசரன் பெயரை மாநிலங்களைவை உறுப்பினர் பெயரை நியமித்திருக்கிறார்.இனமானம் பேசும் முகத்திற்கு கரி பூசுவதற்கு வேறு சான்று உண்டோ? பிஜேபி ஆட்சியில் இருந்த போது சோ விற்கு அந்த நியமனம் செய்தார்கள் அது பொருத்தம்..
