தொல்பொருள் ஆய்வுத்துறை, ஆசியவியல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு நிறுவனங்களிலும் சுவடித்துறை என்று உண்டு. மேலும், கீழ்த்திசை சுவடிகள் நூல் மையம் என்ற ஒரு நிறுவனமும், டாக்டர் உ.வே.சா. நூலகமும், திருவனந்தப்புரம் பல்கலை திராவிட மொழிகள் ஆராய்ச்சி நிறுவனமும் ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்து வெளியிட்டு தமிழுக்கு வளம் சேர்க்கிறோம் என்று 40 ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொல்காப்பியத்திற்கு தெய்வச்சிலையார் உரையையும், சிலப்பதிகாரப் புக ...
POST: 2012-06-28T16:34:37+05:30
உலக மயமாக்கல்,வணிக எல்லைகளை விரிவு செய்தல் என்ற வாயிற் கதவுகளை திறந்து வைத்தவர் நரசிம்ம ராவ்.ஆனால் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி பெயர்களால் மாடங்களும்,கூடங்களும் இருப்பது போல நரசிம்ம ராவ் பெயரில் ஒரு நடுநிலையப்பள்ளிக்கூட அவர் பெயர் வைக்க மனமில்லையே! ஆந்திராக்காரர்களின் கோபம் ஊர்காயோடு நின்று விடாமல் இந்தியர்களை தட்டி எழுப்புமா என்று கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குமுறியிருக்கிறார்!
POST: 2012-06-28T16:07:30+05:30
அனைத்திந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளர்களே பணியாற்றியக்காலம் உண்டு.சிட்டி,மாயாவி,துறைவன்,அகிலன் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர் வானளாவி வளர்ந்த அகிலன் ஞானபீட விருதுப்பெற்றவர்.எழுதி எழுதி தேய்ந்து ஓய்ந்து போன நிலையில் நினைவு மறதியால் வாழ்வின் இறுதி நாட்களில் அவதியுற்றார்.அடக்கி வைத்திருந்த அவலம் தான் இப்படி முடுக்கி விடும் என்று படித்திருக்கிறேன். பணிவும் பரிவும் காட்டுவதில் தந்தையின் புகழ்க்கொடியை இன்றுவரை உயர்த்திப்பிடிக்கும் அண்ணன்,அகிலனின் மைந்தன் தான் அகிலன் கண்ணன். தமிழ்ப்புத்தகாலயம் அத ...
POST: 2012-06-28T15:33:56+05:30
எங்கள் தெருவில் குடிபோதையில் இருவர் வெட்டிக்கொண்டார்கள்.இறந்து போன அந்த இருவரின் ஆன்மாவும் இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவேண்டுமென்று நிறுவனத்தார் நேற்று அவர்கள் வீட்டிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.காசோலை வருமென்று எழுதவில்லை.
POST: 2012-06-26T16:07:39+05:30
கமில் சுலபில் என்ற செக் நாட்டு அறிஞர் புரட்சிக்கவிஞர்க்கு எழுதியக்கடிதத்தின் தன் முகவரியை செக் மொழியிலேயே எழுதிவிட்டாராம்.இதைக்கண்டறியாமல் அவர் எழுதிய வரிகளைப்போலவே கோலமிடலாம் என்று புரட்சிக்கவிஞர் சொன்னாராம்.எதிரே இருக்கிறNCBH ஐ கேட்டு இருந்தால் ஏழு பேர் முகவரி தந்து இருப்பார்கள்.கமில் சுலபில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தங்கியிருந்தார் என்பது உலகு அறிந்தது. புரட்சிக்கவிஞரின் பாடல்களை 1960 களில் செக் மொழியில் Novy New Oriental Monthlyல் அறிஞர் கமில் சுலபில் மொழிப்பெயர்த்துள்ளர்....
POST: 2012-06-26T15:12:55+05:30
முதல் மொழிப்பல்கலைக்கழகம் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசுத்தலைவர் டாக்டர் ச ராதாகிருஷ்ணன் பாட்டியாலா மாநகரில் பஞ்சாபி பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார்(24.6.1962) பஞ்சாப் மாநிலத்தில் வேறு பல்கலைக்கழங்கள் இருந்த நிலையில் பஞ்சாபி பல்கலைக்கழகம் என்று பெயரிட்டார்கள் போலத்தெரிகிறது. பஞ்சாபி என்பது மொழியின் பெயர்,ஒரு மாநில மொழியின் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவது புதுமை என்றாலும் மொழியுணர்வு பின்னாளில் பூசலக்கு இடம் தரக்கூடாது.குறுகிய நோக்குகளுக்கும் மொழி உயர்வு என் ...
POST: 2012-06-25T16:54:53+05:30
எல்லாவற்றையும் எவரோ செய்திருக்கிறார்கள்,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து கணக்கிட்டால் பல்லாயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகள்,அறிவியில் கட்டுரைகள்,உலகில் நடந்த தகவல் விளக்கங்கள் அனைத்துமே தமிழில் வந்துள்ளன. தேடிக்கண்டறியாமல் திரும்பத் திரும்ப செய்ததையே செய்து பாழாக்கிறோம்.எனவே அறிய நூல்கள் என்று ஒன்று கூட அச்சாகவில்லை என்று சொல்லாதீர்கள் என்று நான் போற்றும் அறிவுக்களஞ்சியம் முதுமுனைவர் தி நா இராமச்சந்திரன் இன்று காலை என்னிடத்தில் சொன்னார். எனக்குத் தெரியாத நூல் பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக சொ ...
POST: 2012-06-24T22:04:49+05:30
5 years back Bharathiar University had selected 56 popular and important Poems of Bharatiyar and translated them into english by Prof Dr K Chellappan,Dr N Ramani and Dr R Saravana Selvan and the book is titled as The Essential Bharathy and designed in such a way that the tamil and the english versions could be read simultaneously for facilitating ease of reference. Many Scholars were not aware of this been published till date and the tamil title of this book is befitting and coined as பாரதி கவ ...
POST: 2012-06-24T21:27:38+05:30
ஆனை மாலையிட்டு அரசன் ஆனான் கதை கிருஷ்ணகாந்த் மறைந்ததைக்காட்டி அப்துல் கலாம் கழுத்தில் மாலை விழுந்ததை நட்வர் சிங் எழுதிக்காட்டியிருக்கிறார்.மாலை கழுத்தில் விழுந்ததும் மாபிள்ளைக்கு மிடுக்கு வருவதைப்போல அப்துல் கலாம் கனவு காணச்சொல்லும் மதிவாணர் ஆனார்.ஆசை எனக்கில்லை அடுத்த முறையே எனக்கு கிடைக்காமல் போனால் என்ற நீதி மொழியை அப்துல் கலாம் தான் சொல்ல முடியும். நாராயணன் நடக்க முடியவில்லை என்று சொல்லி பிலிப்பின்ஸ் போக மறுத்தார்.ஆனால் ஸ்வீடன் போக இசைந்தார்.அவருடைய மகள் தான் இந்தியத்தூதர்.மகள் வீட்டுக்க ...
