POST: 2012-06-24T21:00:11+05:30

தன்னோடு பணியாற்றுபவர்களை மிதிக்கத்தெரிந்தவர்கள் தமிழர்கள்,மதிக்கத் தெரிவதில்லை! மேலே இருக்கிறவர்களை துதிக்க தெரிந்திருக்கிறதேத் தவிர இதெற்கெல்லாம் வேறுபாட்டை பாருங்கள்? காவல்துறையின் காசுமீரத்தொகுதியில் பணியாற்றி மறைந்த ராஜு அவர்களைப்பற்றி அவருடைய மேலதிகாரி கார்த்திகேயன் உருக்கத்தோடு எழுதியிருக்கிறார்.கடமைத்தவறாதவர்,கண்ணும் கருத்துமாக பணியாற்றினார் என்று... வேலையாளைப்பற்றி குறை சொல்லாமல் இருப்பதை பாரதியாரிடமே காணவில்லை,சேவகர்களால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர் என்பதே அவரின் வைர வரிகளாகும்...

POST: 2012-06-24T20:43:38+05:30

களி தெலுங்கும்,கவின் மலையாளமும் உன் உதரத்தே உதித்தெளுந்தே ஒன்று பல ஆயிடினும் என்பது போல இத்தாலியமும்,பிரெஞ்சும் இனியதொரு ஸ்பானிஷ்ம் சித்திரமாய் இலத்தின் மொழியின் உதரத்தே உதித்தெளுந்து ஒன்று பல ஆயிடினும், இலத்தின் மொழி சீர்குலைய இன்தமிழோ சீரிளமைத்திறம் குன்றாமல் செழித்து இனிது வாழ்கிறதே என்று பாடினால் பொருந்துமா? தொலைக்காட்சி,திரைப்படங்கள்,விமானப்பயணங்கள்,வானொலிச்செய்திகள்,புத்தகங்கள் விரைந்து பரவுவதால் இலங்கைத்தமிழ்,மலேசியத் தமிழ்,நெல்லைத்தமிழ்,சென்னைத்தமிழ் என்று நீட்டி முழக்காதீர்கள்.இதி ...

POST: 2012-06-22T21:37:59+05:30

சிக்காகோ பல்கலைகழகத்தில் மொழியியில் பிரிவில் தமிழும் 1962ல்இடம்பெற்றது.வழக்கமாக இந்தி,வங்காளம் போன்ற மொழிகளோடு தமிழும் இடம்பெற்று மொழியியில் பாடமாக கற்பித்தார்கள். அறிஞர் தெ பொ மீ அங்கே தான் தமிழிலக்கிய வரலாறு பேசினார். மேலும் அவர் அங்கேயே மார்ச் 26 முதல் ஜூன் 17,1962ல் தமிழ்ப்பாடங்களை சில அமெரிக்க மாணவர்களுக்கும் கற்றுத்தந்தார். ஆங்கிலத்துறை கல்வி கற்றிந்த ஏ கே இராமானுசன் கன்னட மொழிக்காரர் அவர் தமிழ்த்துறையில் இடம்பெற்று ஆசிரியரானார். ஆண்டு வளர வளர மாணவர்கள் எண்ணிக்கை வளர்ந்திருக்க வேண்டு ...

POST: 2012-06-18T12:12:07+05:30

இந்திய நாட்டிலிருந்து படித்தவர்கள் 80% பேர் அயலகம் செல்கிறார்கள்.புலம் பெயர்வில் உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்திலும் வங்கதேசம் 2வது இடத்திலும் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத மணித்திருநாடு,ஊருக்குள்ளே வாழ முடியாமல் உலகெங்கும் திரிய வைப்பது நம் நாடு திரை கடலோடி புகலிடம் தேடு என்று பழங்காலத்திலேயே ஔவையார் அறிவித்திருக்கிறார்கள்.புகலிடம் என்பதை செட்டியார்களும் முஸ்லிம்களும் ஏடு எழுதும் போது திரவியம் என்ற பாடபேதத்தை சேர்த்து விட்டார்கள். இது பற்றி அமெரிக்க வ ...

POST: 2012-06-15T14:54:51+05:30

சாமா,சர்மா,சாஸ்திரிகளைப் போல முகோபாத்தியாயா,பந்தோபாத்தியாயா,சட்டோபாத்தியாயா என்ற மூன்றும் தான் ஆங்கிலேயர்களால் Mukherji,Chatterji,Banerji என்று மாறிவிட்டது. இந்த அழகில் சீர்திருத்தம் பேசும் வங்காளத்தில் Banerji,Mukherjiஐ தள்ளுவதையும் Chaterjiஐ வரவேற்பதையும் பார்த்தால் சிரிக்கத்தோன்றுகிறது. ஆகையால் குலாம் கான்,அந்தோணிசாமி,சிவசைலம்,ஒரு நாடார்,ஒரு வன்னியர்,ஒரு இசை வேளாளர்,முதலியார்,மூப்பனார்,ஐயர்,அய்யங்கார் என்றே தமிழர்களும் தங்களை பெயர்களோடு இணைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நித்தியானந் ...

POST: 2012-06-15T14:29:01+05:30

அபிஷேகத்தீர்த்தம் ---------------------------------------------------------------------------------- மலம் கழுவுதல் என்பது நமது ஆன்மீகத்தின் அடிப்படைக் கொள்கையாகும் குளத்தங்கரையிலும் ஆற்றங்கரையிலும் மலங்கழிப்பதை மணிவாசகரே பாடியிருக்கிறார்.தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் என்பது திருவெம்பாவை. துப்புரவில்லாத மானங்கெட்ட ஏழ்மையில் வீட்டில் கழிவறைப்பற்றிய கருத்தில்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இந்தியா முதன்மை இடத்தையும் இந்தோனேசியா இராண்டாம் இடத்தையும் பெற்றிருப்பதை நா ...

POST: 2012-06-14T16:49:38+05:30

ஓடிப்போன பெண்ணையும் ஓடிப்போன நண்பனையும் ஊர் தூற்றிக்கொண்டு தான் இருக்கும். திரும்பி வந்தாலும் கூட ஓடிப்போனவள் தானே என்று சொல்வார்கள். பார்த்தனை,நீ என்று பார்த்தனை? என்பது பாவேந்தரின் தொடர்

POST: 2012-06-14T12:35:26+05:30

இங்கிலாந்து நாட்டு அரசி முடிசூட்டிக்கொண்ட பொன்விழாவில் ஓர் அவலமான நிகழ்ச்சி நடக்கிறது. பிழையில்லாமல் இலக்கியச் செறிவோடும் மெருகோடும் ஆங்கிலத்தைக் காத்துவரும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அரசியார் ஆங்கில ஆய்வு நிலையத்தின்(Queens English Academy) மணிவிழா நடைபெறுகிறது. இந்த ஆய்வு நிறுவனத்தைக் காத்து வளர்க்க வேண்டும் என்ற கருத்தோடு, விரும்பும் போது துணுக்குச் செய்திகளும்(Twitter) தொலைபேசியின் நறுக்கு ஆங்கிலமும்(Text speak) படையெடுத்து ஓங்கி வருகிற காலத்தில், ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு விண்ணப ...