POST: 2012-04-05T23:43:02+05:30

அன்னை தெரசா நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சென்னை அருங்காட்சி கலையரங்கில் 8.4.2012 கொண்டாடவுள்ளது. சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்த தாய்! உலகமே அம்மா என்று உச்சரித்த உன்னதத்தாய்!! சமூகத் தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்த சமுதாயத்தாய் ஆக்னஸ் கொன்சா போஜாஜியூ (ரோஜா அரும்பு என்ற பொருள்) ஒரு சத்தியத் தாய்!!! நலிந்தோருக்கும், தொழுநோயில் உழல்வோர்க்கும், நிலை குலைந்த அனாதைகளுக்கும் விழியுற்றோர்க்கும் நெடிய பல உதவிகள் செய்து நிழலாய் நின்றார்....

POST: 2012-04-04T15:52:07+05:30

உறவோடும் பரிவோடும் என் சித்தப்பா நெல்லை கண்ணன் தன்னுடைய 5 நூல்களையும் எனக்கு நேற்று அனுப்பியிருந்தார்.வாய் அசைந்தாலும் உங்கள் கை அசைந்தாலும் சிந்தனையும் செந்தமிழும் சேர்ந்து வெள்ளமாக பாய்வதை எளியவன் என்ன சொல்லி புகழ்வது?

POST: 2012-04-04T15:46:12+05:30

கம்பவாரிதி என்ற மற்றொரு பட்டத்தை பெறுவதற்காக எந்தையும் தாயும் இன்று இலங்கை செல்கின்றனர் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு

POST: 2012-04-04T15:41:01+05:30

புரட்சித்தலைவருக்கு பாட்டு எழுதுவதற்காகவே பேரூரிலிருந்து பஞ்சாலைத்தொழிலை தூக்கி எறிந்துவிட்டு நெஞ்சாரத் தமிழ்ப்ப்புலமைத் ததும்ப வரிப்புலியாக வாழந்து வரும் பெரியப்பா,பெருமையோடு அழைத்து மகிழும் புலமைப்பித்தனை நாளும் கண்டு உறவாடி மகிழும் அலுவல் வாய்ப்பாக கிட்டியுள்ளது...

POST: 2012-03-29T14:58:09+05:30

உயர்பதவிக் கல்விக்கென இங்கிலாந்து சென்று பேராசிரியராக பரோடா வந்து விடுதலை வேட்கையில் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பின்னர் உலகப்பற்று நீங்கிய பெருஞானச்சுடர் யோகி அரவிந்தர் மாறியதை நாடு நன்கறியும்.....