POST: 2012-03-28T14:51:57+05:30

தந்தை பெரியார் சந்தை ஓரங்களிலும், சாவடிகளிலும் நின்றபடி சீர்திருத்த முழக்கம் செய்து கொண்டிருந்தார். பற்றி எறியும் பகுத்தறிவுத் தீப்பிழம்பாக வாழ்ந்த அவரை சுற்றி சிலர் மட்டுமே இருந்தனர். எவர் எதிர்த்தாலும் அவரை பெயரைச் சொல்லியபடியே 1965லிருந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாக தமிழகத்தில் சனாதனம் மிதிக்கப்படுகிறது. யுனெஸ்கோ அவரை பாராட்டிக் குறிப்பிட்டதை மதன்ஜித் சிங் இந்து நாளிதழில் எழுதி காட்டியிருக்கிறார்....

POST: 2012-03-28T14:48:01+05:30

முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது. உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு. மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் சிலையைச் சுற்றி மீனவர்களை வலை வீசுவதை என்னவென்று சொல்வது? திருவள்ளுவர் கல்லாய் நின்றதற்கு அதுவே ஒரு காரணமாகும். எதிரே உள்ள விவேகானந்தருக்கு மீன் வறுவல்தான் விருப்ப உணவாகும். காலத்தின் கோலம் இந்த ...

POST: 2012-03-28T14:13:16+05:30

முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது. உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு. மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் சிலையைச் சுற்றி மீனவர்களை வலை வீசுவதை என்னவென்று சொல்வது?

POST: 2012-03-27T12:55:32+05:30

கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல், நாடுவிட்டு நாடு பெயர்தல், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஆக்கமூட்டுதல் வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஒரு காலத்தில் உழைப்பதற்கும் பிழைப்பதற்கும் வேறு வழியில்லாமல் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்களோ இல்லையோ, தேம்பிக் கிடந்தார்கள் நம்முடைய மக்கள் இப்போது கல்வி, வணிகம், பண்பாட்டு பரிமாற்றம், தொழில் நுணுக்கம், அதிகாரப் பதவிகள் போன்ற உயர்வான வாய்ப்புக்களை வளர்த்துக்கொள்வதற்கு நம்முடைய மக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார்கள். நேற்று முன்னாள் ...

POST: 2012-03-26T17:19:24+05:30

செழிப்பான செல்வக் குடும்பத்தில் சிகரமாக வாழ்ந்த திருவென்காடர், காதற்ற ஊசியும் வாராது காலக் கடை வழிக்கே என்ற கருத்து முதிர்வைப் பெற்று பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார்.

POST: 2012-03-26T15:04:47+05:30

வாழ்க்கை என்பது இயற்கையாக மானுடப் பிறவிக்கு வாய்த்த ஒரு வரம் என்பார்கள்.மனிதப் பிறவியும் வேண்டுவது இம் மாநிலத்தே என்பது தேவாரத் திருமறையாகும். புளியங்காய் பறந்த நிலையிலேயே ஓடு ஒட்டியே இருக்கும். அது கனியக் கனிய ஒட்டுறவு இன்றி அதன் ஓடு தனியே கழன்றுவிடும். அதுபோல வாழ்வு நிலை கனியக் கனிய மிகச் சீறிய மேண்மையுடைய சிலர் மட்டுமே ஓடு கழறும் உயர்வினைப் பெறுவார்கள். அந்த நிலையைத்தான் துறவு என்றும், பக்தி வைராக்கிய ஞானம் என்றும் பெரியோர் கூறுவார்.

POST: 2012-03-23T16:39:06+05:30

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒ.பி.நையார் என்ற பெருந்தகை இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றார். நாடுவிட்டு நாடு பெயர்ந்த, மக்களினம் தங்கள் கலைப்பண்பாட்டு பழக்க வழக்கங்களை காத்துவருவதில் எப்படிப்பட்ட சூழல்களில் சிக்கி மீள்கிறார்கள் என்பது தான் நெடுங்கதையின் கருத்தாகும்.