POST: 2012-04-17T12:53:23+05:30

காவிரியில் நீராடச் செல்லும்போது அந்தணரான முதலியாண்டானின் கையைப் பற்றிச் செல்வாராம் இராமாநுசர். நீராடித் திரும்பும்போதோ தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லியின் கையைப் பற்றிக்கொண்டு நடப்பாராம். சாதியபிமானம் கொண்டவர்கள் இக்காட்சி கண்டு மருண்டார்கள். இராமாநுசரோ, ‘சாதிச்செருக்கு நாராயணனுக்குச் செய்யும் இழுக்கு‘ என்று உணர்ந்தார்.

POST: 2012-04-17T12:30:32+05:30

‘நான் அறிந்த நாராயண மந்திரத்தை எனக்குள் வைத்திருந்து நான் பரமபதம் அடைவதைக் காட்டிலும் நானிலுத்து மக்கள் எல்லாம் இந்த மந்திரத்தினால் உயர்வு பெறுவார்கள் என்றால், அந்த மந்திரத்தை மன்றில் நின்றல்ல, குன்றில் நின்றல்ல, கோபுரத்தில் நின்று ஒலிப்பேன் என்ற மாபெரும் புரட்சியாளர் என்று இராமானுஜரை – எம்பெருமானாரை–உடையவரை-எதிராஜரை போற்றுவதுதான் வைஷ்ணவம்.

POST: 2012-04-15T12:23:48+05:30

ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்! கண்டறிவாய் எழுந்திரு நீ இளந்தமிழா கண்விழிப்பாய்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

POST: 2012-04-15T12:18:47+05:30

சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் பாடல் எழுதிய புலவர்கள் இருந்தார்கள் புலமைப்பித்தன் ------------------------------------ நீங்கள் தலைவருக்கும் தலைவிக்கும் பாடல் எழுதிய புலவர் இலங்கை போல் இதயம் கொண்ட இன உணர்வு போராளி வெள்ளை மீசை வைத்த குட்டிப் பெரியார் மயிலையில் ஒரு குயிலைப் பார்க்கிறேன் ஆம் நீங்கள் பாவேந்தரின் பாட்டுக் குயில் அவசரக் கவிஞர்கள் மத்தியில் நீங்கள் எங்கள் அரசவைக் கவிஞர் நான் யார் நீ யார் என்ற பாடல் மூலம் நீ யார் என்பதை நான் அறிந்து கொண்டேன் எம் ஜி ஆரின் நிழலில் வாழ ...

POST: 2012-04-14T13:11:12+05:30

உலகமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகையாகப் பிரிந்தது என்று சொல்ல வந்த தொல்காப்பியர், மலையில்தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், மாயோன் மேய காடுறை உலகமும் என்று முல்லை நிலத்தைத் தலைமையாகவும் மாயோன் ஆகிய திருமாலை காட்டுகிற மாட்சியைத் தமிழர்கள் பெரிதும் மதித்திருக்கிறார்கள்.

POST: 2012-04-14T13:09:43+05:30

தமிழ் இலக்கியங்களை எல்லாம் பிழிந்தால், பக்திச் சுவை சொட்டும் என்று நினைக்கத்தக்க அளவுக்கு சைவ, வைஷ்ணவ தத்துவ புராண இதிகாச ஞான நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. பகவத் புராணத்தில் பக்தி என்ற பெண் குழந்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மராட்டியத்தில் மங்கையாகி, குஜராத்தில் கிழவியானாள் என்று ஒரு வரி உண்டு. இது ஏறத்தாழ வைஷ்ணவம் நெல்லையில் இருந்து துவாரகை வரை வளர்ந்ததைக் காட்டுவதாகும். வைஷ்ணவம் ஒரு தொன்மையான சமயமாகவும் திருமாலைத் தலைவராகவும் கொண்ட பெருமையுடையது

POST: 2012-04-12T15:30:34+05:30

“என் தாய் ஒருநாள் கூட எங்களைப் பார்த்து என் தந்தையைப்பற்றி ஒரு சொல்கூடக் குறையாகக் கூறவில்லை. எனவே தாய் தந்தையர் பற்றிய மதிப்பு என் மனத்தில் எப்போதும் உயர்வாகவே நிலைத்து நிற்கும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியது குறிக்கத்தக்கதாகும். குடும்ப வாழ்வு குளிர் பூஞ்சோலையாகவும், குழந்தைகள் மலர்க் கொடிகளாகவும், உறவினர் நிழல் வழங்கும் மரங்களாகவும் திகழும் சூழல் எங்கும் அமையவேண்டும்....

POST: 2012-04-12T15:28:02+05:30

எந்த ஒரு பழக்கத்தையும் வழக்கமாக்கிக் கொள்ள குறைந்தது இருபத்தேழு நாள்கள் ஆகும். எனவே இருபத்தேழு நாள்கள், நாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம் மௌனமாய் இருந்து மௌனமாய்க் குடும்ப நிகழ்வுகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் இருபத்தேழு நாள்கள் முடிந்தபிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள குறை நிறை உங்களுக்குத் தெரியும். பின்னர்க் குறைகளை நீக்கி நிறைவுடன் வாழத் தொடங்கும்போது உங்களுக்குள்ளேயே ஒருவித ஆற்றல் பிறக்கும். அந்த ஆற்றல் உங்கள் குடும்பத்தைச் செழிப்பாக்கத் துணையாக அமையும் என்ற உறுதி தருகிறேன்

POST: 2012-04-10T17:12:50+05:30

கணவனும் மனைவியுமாக அமைந்த குடும்ப வாழ்வில் விளையும் வளைவுகள், நெளிவுகள், சரிவுகள், திருப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகிய மன நிலைகளை ஒரு சேரத் தொகுத்தால் சிக்கல்கள் என்று பெயரிடலாம்.