POST: 2012-03-12T12:23:38+05:30

சங்கப்புலவர்களுள் முடிமணியாக விளங்கும் நல்லிசைப்புலவர் திலகம் கபிலர் ஆவார்.கபிலரின் புலமையை சங்கப்புலவர்கள் பெயர் சூட்டி பாராட்டியுள்ளனர்.தமிழகத்தின் தாவரவியலில் 99 பூக்களின் பெயர்களை தொடுத்தப்பெருமை கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் சிறப்பாகும்.வோர்ட்ஸ்வொர்த்க்கு கூட இவ்வளவு பூக்களை எண்ணமுடியுமா என்றுத் தெரியவில்லை. வள்ளல் பாரியின் தோழராகவும் பாரி மகளிரின் காவலராகவும் திகழந்தார் என்பதை நாடு நன்கறியும். பாரியின் பரம்பு மலையின் வரம்பில்லாத அன்பை பாடும் கபிலர் பாட்டு நலம் ஈடற்றதாகும். கபிலம்-பேராசி ...

POST: 2012-03-09T12:03:50+05:30

இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன என்று சிவபுராணம் சொல்கிறது. மகாராட்டிரா மாநிலத்தில் ஐந்து, உத்திரப்பிரதேசத்தில் இரண்டு, மத்தியப்பிரதேசத்தில் இரண்டு, ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று, நம் தமிழ்நாட்டில் ஒன்று என பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ஜோதிர்லிங்கத் தலமான இராமேஸ்வரம் பன்னிரு திருத்தலங்களில் பத்தாவது திருத்தலமாகும். பொதுவாகப் பத்துக்கு எப்போதும் பெருமை உண்டு. உழைக்கும் நம் கைவிரல்கள் பத்து என்பது மட்டுமல்ல. அரசர் அங்கம் பத்து. அ ...

POST: 2012-03-08T11:09:07+05:30

இந்து சமய புராணங்களில் வாகனங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இந்து சமயக் கடவுள்களில் சில கடவுள்களுக்கு மட்டும் வாகனங்கள் உண்டு. திருமாலுக்கு – கருடன் சிவனுக்கு – ரிசபம் சுப்பிரமணியனுக்கு – மயில் கணபதிக்கு – மூஷிகம் அய்யப்பனுக்கு – புலி இந்திரனுக்கு – வெள்ளை யானை மன்மதனுக்கு – தேர் ரதிக்கு – அன்னம் துர்க்கைக்கு – சிங்கம் இதுபோல் எட்டு திசைக்காவலர்களுக்கும் தனித்தனி வாகனங்கள் உண்டு.

POST: 2012-03-07T11:40:27+05:30

இளமைப்பருவம் கல்வித் தேடலுக்கும் கண்ணின் தேடலுக்கும் இயல்பாகவே இரையாகும. சில நிலைகளில் முன்னதை இடறிவிட்டுக் காதல் தான் கண்களைக்கட்டிவிடும்.....