POST: 2012-03-06T11:31:14+05:30

திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் நெடுமொழியை நினைந்த சன்மார்க்க ஆர்வலர்கள், திருவருட்பாவுக்கு உருகாதார் திருவாசகத்துக்கும் உருகார் என்று பாராட்டி மகிழ்கின்றனர்.

POST: 2012-03-05T14:07:02+05:30

இந்திய மொழிகள் குறித்து, புகழ்பெற்ற அறிஞரான டாக்டர். சுனித்குமார் சட்டர்ஜி,வங்க நாட்டுப் பேராசிரியர் தமிழார்வத்தால் தன் பெயரை நன்நெறிமுருகன் என மாற்றிக்கொண்டதும் நாம் நினைக்கத்தக்கது....

POST: 2012-03-05T11:02:17+05:30

இன்று காலை மருத்துவமாமணி அண்ணல் குமரேசன் திருமண விழாவில் Virtual Reality theatre தமிழில் எப்படிச்சொல்லலாம் என்று வினவினார், நான் சொன்னேன் படிமத்திரைக்கூடம்....

POST: 2012-03-04T20:39:49+05:30

அகர முதல எழுத்தல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு உரை நடைத்தென்றல் (பேராசிரியர் முனைவர் ஒளவை நடராசனாரின் பன்முக ஆளுமைச் சிறப்பு) கட்டுரையாளர் கு. பாலசுப்பிரமணியன்இ எம்.ஏ.டிப்.இன்.ஜர்னலிசம் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர் (ஓய்வு) தமிழ்நாடு அரசு தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின்; மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசனாரைத் தமிழ் கூறும்; நல்லுலகம் முழுமையும் நன்கறியும.; அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் நாட்டரசின் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக ஏறத்தாழ எட்டாண்டுக் ...

POST: 2012-03-04T19:59:14+05:30

On 2nd March 2012,Attended the Release and introduction of The Encyclopedia of Hinduism(11 Volumes).Heard the English,Sanskrit and Tamil speeches of Sri Jayendra Puri Swamiji,Prof Prema Pandurang and Dr Krishnaraj Vanavarayar.These 11 volumes work started wayback in 1991 and coordinated by Ms Seetha Chidambaram(Sister of Dr AC Muthiah) and Ms Annapoorani Veerppan.Function was well organized in the green sylvan surroundings in Kotturpuram with Veena Melodies by Oppilal School of Music....

POST: 2012-03-02T15:28:54+05:30

மாமன்னர் அலச்சாந்தருக்குப் பின் செல்யூகசு நிகேட்டர் விடுத்த மெகசு தனிசு என்பார்,கங்கை நாட்டுப் பாடலிபுரத்தில் சந்திரகுப்த வேந்தன்பால் தங்கித் தாம் அந் நாளிற் கேள்வியுற்ற செய்திகளைக் குறித்து வைத்தார் .அக்குறிப்புனுள் சேர சோழ பண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.அவற்றுள் சேர்மா (Chermae) என்பது சேரமான்களையும்,நறா(Narae) என்பது சேர நாட்டு வட பகுதியான குட நாட்டு நறவூரையும் குறிப்பனவாம்.

POST: 2012-03-02T14:13:51+05:30

மகாபாரதத்தில் யுதிட்டிரன் இராய சூய யாகம் செய்தபோது சோழ சேர பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசர் கூறுகின்றார்.இதனால் வேத காலத்திலும் இதிகாசகாலத்திலும் வட நாட்டு வடவருக்குத் தென்னாட்டுச் சேர சோழ பாண்டியர் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாய் விளங்குகின்றது.....

POST: 2012-02-29T13:09:57+05:30

புலவர்களுக்கு எதிரே தன் தோளில் (சேக்ஷ்ப்பியர்) புகழ்மாலை விழவில்லையே என்ற ஏக்க வரிகள்தான் பதினாங்கு அடி விருத்தத்தினை வருத்தமாக எழுதப்பட்டது வேட்கை இல்லா வெற்று வாழ்க்கை அடுத்தவர்க்கு அல்லல் தருவது அமைந்த குணமே உடையவராயினும் எடுத்து இன்னொருவருக்கு துன்பம் எப்போதும் செய்யார். நிரம்பச் செய்யும் நினைப்புடையவராக நேர் நின்றாலும் துரும்பும் கூட எந்தத் துளியும் செய்யமாட்டார் உருகுவது போலத் தோன்றும் இவர்கள் ஒரு சிறிதும் அசையாத பெருங்கல் கவர்ச்சியும் காட்டமாட்டார் கடுகளவும் கவலைப்படாத மெத்தனத் த ...