POST: 2012-02-21T15:25:19+05:30

வணக்கம் ஒளவை நடராஜன் ஐயா அவர்களுக்கு நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்திற்கும் சேவை செய்ய ஆண்டவன் அருள் கிடைக்க வணங்குகிறேன்.வாழ்க வளமுடன் உங்களில் நான் கண்ட தனிச்சிறப்பு பகைமை இல்லாமல் எல்லோருடனும் நட்பாகப் பழிகிய பழகிக் கொண்டிருக்கும் மனப்பாங்கு. இது எல்லோருக்கும் இருக்காது, லண்டனில் அதுவும் நமது பல்கலைக்கழகத்தில் முதன் முதல் நீங்கள் என்னைப்பார்க்க வந்தது இன்றும் ஞாபகத்தில் உண்டு, உங்கள் 75-ஆவது பிறந்த தின வைபவத்தில் பங்குபற்ற முடியாது விட்டாலும் நீங்கள் சுகமே வாழ கடவுள ...

POST: 2012-02-21T14:54:51+05:30

புரட்சி நடிகரைத்தான் போர்ப்புலி என்று புவியில் போற்றுவார்கள்.மேனி பெண்ணாலும் புலியின் மீது பாய்ந்த வாணி நீ புகழ் வளர்த்த லட்சுமி! மிரட்சிக்கொண்டாராம் புரட்சி நடிகர்.இப்படி வளர்ந்து தன்னந்தனியாய் தமக்கையாய்,தங்கையாய்,தகுதி மிகுந்த ஒரு தாயாய் ஆயிரம் படங்களில் நடித்த அற்புதத்தாரகை தளர்ந்த அகவை தான் எனினும் தளராது இருந்தாய்! உதிர்ந்தது மலர்! எங்கள் உள்ளம் அதிர்ந்தது!! அண்மையில் கூட அன்னையோடு இருந்து படங்கள் சிலவற்றை நீக்கக்குழுவில் இருந்தப்போது பார்த்தேன்.பரிவோடு பேசி தங்கள் பாசச்சொற்களை உறவோடு எண ...

POST: 2012-02-20T12:27:22+05:30

உரையாடல் நாயகர் அவ்வை நடராசனார் -------------------------------------------------------------- முனைவர் அவ்வை அவர்களுடன் எனக்குக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவு உண்டு. அவர் தமிழ்வளர்ச்சித்துறையின் செயலாளராகப் பணியாற்றியபோதே, அவர்களை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குப் பலமுறை கிடைத்தது. மொழியியல்பற்றிப் பல செய்திகளை நான் அவர்களுடன் பகிர்ந்துள்ளேன். அவரது உரையாடல்முறையை மிகவும் நான் விரும்புவேன். நம்மை முதலில் முழுமையாகப் பேச அனுமதிப்பார். பின்னர் நாம் என்ன கூறினோம் என்பதை அவர் ந ...

POST: 2012-02-18T23:46:39+05:30

THE MEASURE OF A MAN - PROF. DR.AVVAI NADARAJAN, M.A., M.Litt., Ph.D . Culture, Identity, Values, Beliefs and Power is what it takes to be respected as a Man. Prof Avvai, the Tamil Classical Scholar Is one among few who has been endowed with all these attributes to qualify to be honoured as a Man of dignity, a Man of Vision. a Man for All Seasons, a Man for all time. It was indeed a great honour for me to meet this Man, in Oxford of all places, when he visited his son Dr.Arul, who had come ...

POST: 2012-02-17T13:20:14+05:30

முனைவர் பத்மஸ்ரீ ஔவை நடராஜன், M.A., M.Litt., PhD. அவர்களின் 75-ஆம் அகவையைக் கொண்டாடி 82 ஆண்டுகளாக அரும் பணியாற்றிவரும் லிப்கோ பதிப்பகத்தார் அளிக்கும் பணிவார்ந்த வாழ்த்து மடல் அற்றார் அழிபசி தீர்த்தல் அறமென்ற வற்றாத வான்கருணை வள்ளலருட் பாவுக்குத் தெள்ளு பொருளளித்த செந்தமிழ் வித்தகன்தன் உள்ளம் மகிழவந்த ஒண்கலைப் பெட்டகமே; என்றுமுள தென்றமிழ்த்தாய் இன்பமுடன் பாராட்ட வென்றிபுனை நூல்களெலாம் விண்டுணர்ந்த பேறாள; பொன்மலர் வாசனை பெற்றதுபோல் வெல்லரிய மென்மதுரச் சொல்லாற்றல் மேவுபெரும் பண்பாள; காசினி யெவ்வி ...

POST: 2012-02-16T12:07:59+05:30

தகவல் களஞ்சியத்தின் தலைமைச் செயலகம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மேசைக் கணிணிகள் புழக்கத்துக்கு வந்த காலம். ஆப்பிள் நிறுவனம், ஐபிஎம் நிறுவனம் இரண்டும் மேசைக் கணிணிகளை விற்பனைக்கு விட்டிருந்தன. அந்தக் கணிணிகளின் படிமக் கணிணிகளைத் தாய்வான் குழுமங்கள் மலிவு விலையில் வழங்கிய காலம். 1984இல் என்னிடம் அத்தகைய படிமக் கணிணி ஒன்றிருந்தது. அதில் பொருத்துவதற்காகத் தமிழ் எழுத்துருக்களைத் தேடினேன். சென்னைக்கு வந்தேன். தமிழில் எழுத்துருக்கள் உண்டா எனத் தேடினேன். தலைமைச் செயலகம் சென்றேன். தமிழ் வளர்ச்சித் துற ...

POST: 2012-02-14T12:43:41+05:30

பனித்துளிக்குள் படுத்திருக்கும் ஈரம் விழித்தெழுந்ததும் ஔவை உதட்டுக் கதவுகளைத் தட்ட அன்றன்றும் வந்து சேரும். மலர்களில் வானவில்லில் சலிப்புத்தட்டினால் வண்ணங்கள் ஔவைபேசும் அரங்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும். நடராசன் பேச்சு முடிந்தபிறகும் தொடர்ந்து மேடையில் தமிழ்த் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கும். கேட்டவர் நெஞ்சங்களில் குற்றாலமும் ஒகேனக்கல்லும் அருவிகள் கொட்டிக் கொண்டே இருக்கும். கடந்துபோன நொடிகளின் கைகளுக்குள் அழகிய சொற்கள் மலிந்து கொண்டே இருக்கும். பிசிறில்லாமல் நிகழ்ச ...

POST: 2012-02-14T12:34:57+05:30

நாடு சமூகம் என்ற அமைப்புக்களை நமது முன்னோர்கள் படை முதலாக அரண் வரையில் ஆறு பிரிவாக அமைத்தார்கள். ஒரு நாட்டின் அனைத்துச் செயல்களுக்கும் வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் நிதி தான் ஆதாரமாகவும் ஊற்றாகவும் அமைகிறது. ஒரு நாட்டின் நிதியின் வளர்ச்சி தான் எல்லா இருளையும் போக்கும் ஒளிவிளக்காகும். பொருள்தான் ஆதாரம் என்பதைக் கருதி பொருளாதாரம் என்ற சொல்லே அமைந்தது. பொருள் என்னும் பொய்யா விளக்கம் என்று திருக்குறள் பாராட்டுகிறது.