POST: 2012-02-14T12:31:25+05:30

நல்வழியில் வாழ்க்கைப்படகில் பயணிக்கவிருக்கும் நவீன் தம்பதியினருக்கு எம் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். எங்கள் அன்பு மாமா இரமணன், பாசமிகு அத்தை பாலகுசம் மற்றும் உடன்பிறவாத் தமக்கை இராசலட்சுமி இளவரசன் அவர்களின் வானிழல் இத்திருமண நாளில் வாழ்த்தொலிப்பூக்களாக மலர்த்தூவும். இல்லறம் அல்லது நல்லறம் அன்று!

POST: 2012-02-06T12:37:12+05:30

ஈனத்தனம் இருக்கின்ற வரையில் இவர்கள் சீனத்தராய் சிறந்து தான் நிற்பரோ,மானத்தை விடுவதற்கும் மற்றவற்றை விற்பதற்கும் ஞானத்தில் ஏமாற்றித்திரிவதற்கும் வேறு எங்கே சான்று காண முடியும் வேலவா! வேலையும் தொலைத்து இங்கு நீ நிற்கலாமா? தைப்பூசம் ஊரெல்லாம் கொண்டாடி பொய்ப்பேசி பிழைக்கின்றார் புலம் புகுந்தோர் பலராவர்....

POST: 2012-02-06T12:16:11+05:30

35 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இந்தியாவும் சோர்ந்திருந்தன.இன்று நம் கண் எதிரிலேயே விண்ணை இடிக்கின்ற அளவிற்கு வெற்றிக்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.35 ஆண்டுகள் எந்த மானங்கெட்ட அரசு இந்தியாவை ஆண்டது? நான்கு மடங்கு பெரிய நாடு என்று சொன்னாலும் சீனாவின் கால் செருப்புக்கூட நம் நாட்டின் தொழில்கள் வளரவில்லையே? இறக்குமதி என்று எதுவும் இல்லையாம்,எல்லாமே ஏற்றுமதி! இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் பைத்தியக்காரத்துணைவேந்தர்களின் தலைமையில்,தப்பித்தவறி மாணவர்கள் பித்தம் பிடிக்காமல் திரும்பி வருகிறார்களே எ ...

POST: 2012-02-02T14:48:28+05:30

Mineral Water:நன்னீர் Pick pocket:வழித்திருட்டு Helicopter: வான் சிவிகை Hotplate:மின் அடுகல் Anti virus software:நச்சு முறி Malware:நச்சு மென்நிரல் Vacuum cleaner:மின் துப்புரவி LCD TV:படிக நீர்ம தொலைக்காட்சி Tube Train:நிலத்தடி தொடரி

POST: 2012-02-02T11:32:26+05:30

பாவேந்தர் குடும்பத்தின் மங்காத ஒளிவிளக்காக வாழ்ந்த திருமதி சரசுவதி அம்மையார் தளர்ந்து முதிர்ந்த நிலையில் மறைந்தார்கள் என்பது தமிழார்வலர்களுக்கு ஆறாத்துயரமளிக்கிறது... இருந்தாய் நீ இப்போது இறந்தாய் சிறந்தாய் நீ வாழ்வெல்லாம் சிந்தை நோகின்றோம்

POST: 2012-02-01T23:23:02+05:30

தானேப் புயலால் தவிப்புக்கு தாக்கப்பட்டு இரையான நம் மக்களின் கண்ணீரைத் துடைக்க என்னுடைய ஒரு நாள் ஊதிய வரைவோலையினைக் காணிக்கையாக உளமுருகி வழங்கினேன்....