இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (மார்ச் 2005) என்ற நூல் தமிழில் ஐயாத்துரை சாந்தன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலில் ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க மாநிலங்கள் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார். பின்னர், கறுப்பர் இலக்கியம், செவ்விந்தியர் இலக்கியம், இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள், ஸ்பானிய, பிரெஞ்சு, போர்த்துக்கீசிய, இத்தாலிய, ஹங்கேரி, யூத, பாலஸ்தீனம் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எழுதி அறிமுகஞ்செய்துவிட்டு ஆபிரிக்க, தென்னாபிரிக்க எழுத்தாளர்களுக்கு ...
POST: 2012-01-18T14:32:15+05:30
சுவிட்சர்லாந்தில் செருமானிய மொழியில் ஒரு திரைப்படம் வந்தது.அந்தப்படத்திற்குப் பெயர் (Madley in love) காதலில் காதல் பித்தம் என்பதாகும்.2009 ல் இப்படம் வெளிவந்தது.இந்தப்படத்தில் செருமானி,பிரஞ்சு,ஆங்கில மொழிகளில் உரையாடல் உண்டு.படத்தின் நடிகர்கள் மூவரைத்தவிர எஞ்சியோர் யாழ்ப்பாணத்தமிழராவர்.ஒரு தமிழ் இளைஞனுக்கும் முன்னரே தாயான ஒருத்திக்கு இடையே மலர்ந்த காதல் தான் கதை.இந்த அழகில் யாழ்ப்பாணத்தமிழர்கள் மேலை நாட்டில் தம் பழைய மரபுகளை காப்பதான ஒரு மயக்கமும் இப்படத்தில் நிழலாடுகிறது. தமிழ் இளைஞன் செருமான ...
POST: 2012-01-17T16:30:31+05:30
ஏறு தழுவுதல்,மாடு பிடித்தல்,மஞ்சு விரட்டு என்ற பெயர்களெல்லாம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சிக்கு பெயர்களாக உள்ளன.தமிழர் வீரம் என்று பேசுகிறவர்களுக்கு இந்த சொற்கள் மறந்து,நல்ல வேளையாக Bull taming என்ற வார்த்தையை சொல்லாமல் இருக்கிறார்கள்.ஜல்லிக்கட்டு என்பது தெலுங்குச் சொல்லாக இருக்காலாமோ என்று ஐயப்படுகிறேன் மாடுகளை அடக்குவது பழங்காலத்து விளையாட்டாக இருக்கலாம்.மாடுகளோடு மகிழ்ச்சியாக விளையாடுவது தான் இந்த வடிவம் பெற்றுள்ளது.மாடுகளின் கழுத்தில் மேல் இருக்கும் திமில்கள் மேலை நாட்டு கால்நடைகளில் காணப்ப ...
POST: 2012-01-16T11:42:53+05:30
இறைவனே மனிதன் எதிரில் நின்று உபதேசம் செய்தது கீதை! மனிதன் இறைவனிடம் முறையிட்டு உருகியது திருவாசகமாகும்!! மனிதனே மனிதனுடைய வாழ்க்கைக்கு உயர்ந்த உண்மைகளை உணர்த்தியது திருக்குறளாகும்!!!
POST: 2012-01-16T00:53:58+05:30
“My entry into and exit from the Earth take place only once. Hence, I shall do a good deed! I shall accomplish it at once! There is no time to either postpone it or avoid it; because, I may not come once again to this earth.” - Engineer, Col. J. PENNY CUICK Architect of Mullai-Periar Dam
POST: 2012-01-16T00:19:18+05:30
Theosophical society was initiated in these countries way back in 19th Century. 1)USA- 1886 2)UK- 1888 3)Singapore- 1889 4)India- 1891 5)Australia- 1895 6)Sweden- 1895 7))New Zealand-1896 8)Netherlands- 1897 9)France--- 1899
POST: 2012-01-13T15:44:52+05:30
இறைவனே மனிதனிடம் வந்து வழங்கியது கீதையாகும்! மனிதனே இறைவனை வணங்கி வேண்டியது திருவாசகமாகும்!! மனிதனே மனிதனிடம் சொன்னது திருக்குறளாகும்!!!
POST: 2012-01-13T15:44:14+05:30
தேடிப்போய் விருதுகளை வழங்குவது வழக்கம்,விருது பெறுவோர் தாமே தம் பெயரை அச்சடித்து தகுதிப்பாடுகளை தெரிவித்து ஊரறிய வெளிப்படுத்துவது எந்த நாட்டு வழக்கம்?
POST: 2012-01-11T14:17:34+05:30
நூற்றுக்கு 43 குழந்தைகள் போதிய ஊட்ட உணவில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறார்களாம்.இது பாரத நாட்டிற்கு பெருத்த இழிவு என்று நம் பிரதமர் பேசியிருக்கிறார். இந்தியன் என்று சொல்லடா! இழிவில் நமக்கு யார் நிகர் என்று சொல்லி நில்லடா!! என்று முரசு கொட்டுவோமாக!!!
POST: 2012-01-11T14:14:56+05:30
வங்க மாநில ஆளுநராக இருந்த கோபால காந்தி, சான்றோர்களை புகழத்தெரியாமல் Circus வேலைகளைச் செய்வதில் நம் பாரதம் முன் நிற்கிறது என்று தாகூர் 150 ஆண்டு விழா நினைவிற்கு முன் நிகழ்வாக நூல்களை வெளியிட்டு பேசியிருக்கிறார்....
