POST: 2012-01-11T14:13:27+05:30

நேற்றைய செய்தி இன்றைய பொய்... கடல் நடுவில் திருவள்ளுவர்க்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று கண்ணியாகுமரியிலிரிருந்தே ஒரு அரசியல் தலைவர் பேசியிருக்கிறார்.நல்ல வேளை; அவர் திரும்பி பார்க்கவில்லை!

POST: 2012-01-10T16:34:15+05:30

வேண்டலாம் என்பது கெஞ்சுவதற்குரியதாக கருதப்பட்டுக் கோரலாம்,கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுவதை எண்ணிப்பார்க்கலாம்.வேண்டுதல் என்பதற்கு விரும்புதல் என்று பொருள்.எனவே வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்ற திருக்குறளை ஐந்தாம் வகுப்பில் விருப்பு வெறுப்பில்லாதவன் என்று ஆசிரியர் அனைவரும் அறிய வேண்டும் என்று கூறினார் என்று பேரறிஞர் அண்ணா எழுதினார்

POST: 2012-01-10T15:24:16+05:30

கரிகாலன் கல்லணை கட்டியதாக சங்கவிலக்கியத்தில் ஏதேனும் ஒரு தொடர் சுட்டிக்காட்ட முடியுமா என்று அறியாமல் நண்பர்களை விடை கேட்கிறேன்?

POST: 2012-01-10T15:17:06+05:30

ஒருவர் பேசுவதையோ எழுதுவதையோ பற்றி அயலார் புகழவோ அல்லது பழிக்கவோ வேண்டும். தாமே தம்பட்டம் அடித்துக்கொள்வது தமிழகத்தில் பெருகிவிட்டது. தாய் கூட மகனின்/மகளின் புகழை பிறர் சொல்லக் கேட்டு மகிழ்வது தான் திருக்குறளின் தீங்குரல்!

POST: 2012-01-09T15:04:56+05:30

வேட்டியோடு இந்திய நாட்டை ஆட்சி செய்தவர் காமராசர் மட்டுமல்ல,இந்திய ஆட்சியையே தலைமை தாங்கியது தேவ கௌடா...

POST: 2012-01-09T15:04:02+05:30

எல்லாமே வேடிக்கை திருப்பெரும்புதூர்,திருவல்லிக்கேணி,திருவில்லிப் புத்தூர்,திருவரங்கம் என்ற இலக்கியப்பெயர்கள் தமிழ்நாட்டில் தான் திருவை இழந்து ஸ்ரீபெரும்புதூர்,ஸ்ரீவில்லிப் புத்தூர்,ஸ்ரீரங்கம் என்று மாறியிருக்கிறது. ஆந்திரர்களோ,கேரளத்தவர்களோ திருப்பதி,திருவனந்தபுரம் என்ற திருவைக் காக்கின்றனர்.திருப்பதி என்ற பெயர் சொல்லக்கூடாது என்பதற்காக ஸ்ரீபதி என்று பெற்றோர்கள் பெயரிட்டு இருப்பது இங்குத்தான் காண முடியும்.ஒரு காலத்தில் ஸ்ரீ வல்லபர் என்று தான் திருவள்ளுவரையே எழுதிப்பார்த்தோம்...

POST: 2012-01-09T14:57:26+05:30

எல்லாமே வேடிக்கை திருப்பதிக்கு சென்று வந்ததற்கு கட்சியை விட்டு கணேசனை நீக்கினார்களாம்.காசுடையவர் சென்னையில் திருவரங்கத்தை அமைத்துக்காட்டி நின்ற கோலத்திலும்,கிடந்த கோலத்திலும் பெருமாளை நிறுவிக்காட்டினார்கள்.கட்சி எப்படி வளர்கிறது என்று பார்த்து வீர பாண்டியர்கள் வியந்து போனார்கள்...

POST: 2012-01-05T23:41:56+05:30

தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்ற மொழிக்கேற்ப வேளாண்மை தொடங்கி விண்வெளி வரை வளர்ந்துள்ள அனைத்துத் துறைகளிலும் கணிப்பொறியின் ஆட்சி நாளும் வளர்ந்து புதுமைகள் பெருகி வருகின்றன. கைநோக அங்கும் இங்கும் கண்கள் தேடிப்பார்க்கப் பல்வேறு பெட்டகங்களிலிருந்து ஒவ்வொரு எழுத்தாக எடுத்துச் சேர்த்து அச்சிட்ட காலம் ஒன்றிருந்தது. பிறகு தட்டச்சு முறை வந்தது. இப்போதோ கணித்திரையில், விரல்களின் திறத்தினால் உரிய மென்பொருளைப் பொருத்தி எந்த மொழியையும் விரைந்து தட்டி முடிக்கின்ற தட்டும் கலைக்குத்தான் டிடிபி (DTP) என் ...