POST: 2011-10-20T14:33:19+05:30

வறுமைக்கோடு என்பது பொருளாதாரத்தில் ஒரு வரைப்படக்கோடு,ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவர் என்பது பொருள்.ஒரு முழம் துணிக்கே வருந்துகிற நாட்டில் ஒன்பது முழம் சுற்றிய நீலத்தலைப்பாகை நிபுணர் அலுவாலியா என்னப்புரிந்து பேசுகிறார் என்று அறிஞர் அருமைநாதன் பேசியிருக்கிறார்!!

POST: 2011-10-19T15:04:47+05:30

மேற்கு மலைத்தொடர் என்பது மேனாட்டவர் குறித்த வெஸ்டர்ண் காட்சு (Western Ghats) என்ற பெயரின் மொழிபெயர்ப்பு;வடவர் இதனை சகயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்;இதன் பழமையான தமிழ்ப்பெயர் வானமலை என்பது.

POST: 2011-10-18T17:16:19+05:30

நாட்டை விட்டு சென்றாலும் கரையிலும்,காட்டிலும்,பகைவர் நாட்டிலும் பிறந்தவர்களைக்கூட இளையவர்களாக அணைத்துக்கொண்ட இராமனுடைய புகழ் பாரட்டத்தக்கது.ஒரு வீட்டிலேயே அப்பாவின் பிரிவுக்குச் சைவம்,அம்மாவின் பிரிவுக்குச்சாத்தம்(சக்தி வழிபாடு) முத்த மகன் பிரிவுக்குச் காணாபத்தியம் (கணபதி வழிபாடு) அடுத்த பிள்ளைக்குக் கௌமாரம் (முருக வழிபாடு )இந்தப்பிரிவுகளுக்கு தான் ஷண்மதம் என்ற பெயர்... உருப்படுமா இந்தக்குடும்பம் என்று வள்ளலார் விழாவில் ஊரன் அடிகள் வருந்திப் பேசியிருக்கிறார்!! குடும்பச் சண்டை என்பது நம் ...

POST: 2011-10-11T14:13:19+05:30

Eleven Years younger than me,eleven times more important to the nation,eleven hundred times more beloved of the nation,Sir Nehru has suddenly departed from our midst and I remain alive to hear the sad news from Delhi-and bear the shock...The old guard-room is completely empty now...I have been fighting Sir Nehru all these 10 years over what I consider faults in public policies.But I knew all along that he alone could get them corrected.No one else would dare do it,and he is gone,leaving me we ...

POST: 2011-10-11T13:03:52+05:30

ஆயுள் தண்டனையை இராமனே மீறினார்...... கைகேயி கூறியதை இராமன் பின்வருமாறு மறுத்தார் 1)பரதனே ஆள;வேறு எவரும் ஆளக்கூடாது. 2)நீ போய் : தனியாக சென்று இருக்க வேண்டுமேத் தவிர 3தாரத்தையும்,தம்பியையும் அழைத்துச்சென்றது ஏழிரண்டு ஆண்டின் (14 ஆண்டுகள் ) வா,நீ அனுபவித்து வராதே என்பது பொருள்.என்று ஆயுள் தண்டனையை மீறலாம் என்பதற்கு இராமயணமே வழிக்காட்டுகிறது என்று வாரியார் சுவாமிகள் கூறியதாக ஒரு வதந்தி!!!

POST: 2011-10-11T12:56:41+05:30

நாற்பது ஆண்டுகளாக நாள் தவறாமல் நமசிவாய வாழ்க என்று சொன்னீர்களே! இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று வாரியார் சுவாமிகளை கேட்டார்கள்: தாறுமாறாக பக்தர்கள் கூட்டம் பெருகி வருகிறது.பக்தி மட்டும் அறவே குறைந்து விட்டது என்றாராம்...

POST: 2011-10-09T18:32:13+05:30

இசுட்டீவ் சாப்ஃசு பல்கலை உரையின் வரிகளான Remain Hungry,Remain foolish படித்தவுடன் பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்ற பதவியை வள்ளலார் வழியில் படித்த நாம் சற்று அயர்ந்தோம்.....

POST: 2011-10-08T10:10:59+05:30

1934 முதல் 1948 வரை ஐந்து முறை நோபல்பரிசுக்குக் காந்தி பரிந்துரைக்கப்பட்டார்.இரண்டுமுறை இறுதிப் பட்டியல்வரை இடம் பெற்றார்.பரிசு கிடைக்காததால் காந்தி வருத்தப்படவில்லை வழங்காமல் விட்டுவிட்டோமென்று நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது!!