POST: 2011-11-08T14:36:21+05:30

மொழிபெயர்ப்புச் சொற்கள் அந்தந்த மாநில மொழிகளில் புதிதாகப்படைக்கப்பெறுவதால் மொழியார்வ வாய்ப்பின்றி ஆளுகை பொறுப்பை மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு இச்சொற்கள் மருட்சியையும் மிரட்சியையும் ஊட்டும்.அவர்கள் இருக்கின்ற வரையில் தலைவிதியே என்று புதிய சொற்களை சொல்லி எழுதச்சொல்லி அவர்களை மிரட்டவேண்டுமென்றும்,மிரட்டி அதட்டும் அதிகாரம் கொண்டு மத்திய அரசின் உள்துறையே புதிய சொற்களை இந்தியில் எழுதாதீர்கள் என்று கேட்டுள்ளதாம். Plan,Project,Rainwater harvesting,Deforestation இவைகளை அப்படியே விட்டு விடுங்கள் என்று ...

POST: 2011-11-02T15:21:57+05:30

தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய்க் கிழக்கு மேற்காக ஓடிக்கடலில் கலக்கும் ஆறு ஹோனவாறு(Honawar)சாராவதி என்பர்.பண்டையத்தமிழ்ப்பெயர் வானியாறு எனப்படும்...

POST: 2011-11-02T15:12:30+05:30

தென் கன்னட மாவட்டத்துக்கும் மைசூரின் எல்லையாய் நிற்கும் மலைத்தொடர் பெயர் Gudramukh,அதனை இப்போது சஞ்ச பருவதம்(சம்ச பருவதம்) என்பர்.பண்டையத் தமிழ்ப் பெயர் குதிரை மூக்கு மலை!!

POST: 2011-10-30T14:44:51+05:30

முதியவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஓர் எல்லை வேண்டும்.எழுபது வயதை தாண்டியும் ஏதாவது பதவி கிடைக்காதா என்று குழந்தைகளைப்போல அனந்தம் அறிவாளிகள் அடம் பிடிக்கிறார்கள்.ஊறுகாய் ஓர் ஆண்டுக்குத்தான் ஊற வேண்டுமாம்.ஓராண்டுக்கழித்தப்பிறகு ஊசிப்போய்விடும்.ஊசியதெல்லாம் குழுக்களில் நெளியும் புழுக்களாக பாழாகிவிடக்கூடாது,மதியைக்கெடுக்கும் மதுவுக்கு வேண்டுமானால் காலப்பழமை இருக்கும்,கெடுக்கும் மதுப்போல காலத்தால் ஊறியர்வர்களும் ஆவார்கள்... என்பது ஓர் ஆங்கிலப்பழமொழியின் தமிழாக்கமாக ஒரு பத்திரிகையாளர் எ ...

POST: 2011-10-25T22:03:49+05:30

கொடுங்கோல் வேந்தன் என்ற கொலைப்பழிப்பூண்ட கடாபி ஊர் நலத்தையும் கருதியிருக்கிறாராம். சீரான மருத்துவமும், சிறப்பான கல்வியும் செழித்து வளர பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார். கல்வியும் நல்லுடலும் பெற்ற இளைஞர்கள் நலம் செய்ததை பெற்று மகிழ்ந்தாலும், குலநாசம் செய்ததை கொடுங்கோலனை கொன்றுத்தீர்த்தார்கள் மக்களாட்சி தானாக மலர்கிற நூற்றாண்டுத் தான் கடந்த இரு நூற்றாண்டுகளாகும். அரசர், மன்னர், வேந்தர், மன்னர் மன்னன் என்ற சொற்களே கொடுங்கோன்மையின் தோள்களை அலங்கரித்த பொன்னாடைகளாகும். மறந்தும் கவிஞர்களும், க ...

POST: 2011-10-25T21:57:24+05:30

நான் வலியுறுத்துகிற இனவழியை, மொழிவழியை என்னருமைத் தம்பியர்கள் தொடர்ந்து நாளும் முன் எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும், இது வரை நான் வளர்த்த நிலையிலேயே நிறுத்தி வைத்தால் கூடப்போதும். ஆனால் முன்வைத்தக் காலை மூடத்தனத்தோடு ஓர் அங்குலம் பின் வைத்தால் நம் குலம் குலையும், நலியும்!! அண்ணல் அம்பேத்கார், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா இந்த மூவரும் விட்டுச்சென்றவர்கள், தொட்டு வளர்க்காமல் இருந்தால் போதும் தோண்டி வேர்களைக் கிள்ள வேண்டாம்...

POST: 2011-10-23T22:01:11+05:30

Thanks To Mr CR C.R. Selvakumar workshop class :பட்டறை production center:படைப்புழையம் Ion:மின்னணு/மின்மவணு Electron:எதிர்மின்னி Proton:நேர்மின்னி Electrical charge:மின்மம் 9.9.2011

POST: 2011-10-21T15:17:10+05:30

விதி மீறியவரின் விதி!! யவண மகளிரை காவல் மகளிராக தமிழ் மன்னர்கள் வைத்திருந்ததாக குறிப்புண்டு.கடாபி தன்னைச்சுற்றி கடுங்கண் கொண்ட காவல் மகளிரை வைத்திருந்தார்.அவர் பேசிய அராபியத்தை கேட்டுத்திகைத்து மொழிப்பெயர்ப்பாளர் மூர்ச்சையானார் .பத்து இலட்சம் சொற்கள் ஆங்கிலத்தில் உண்டு,அராபியத்தை விளங்கிக் கொள்ள முடியுமா? உரிய சொற்களை ஆங்கிலத்தில் தேட முடியுமா? என்பது தான் வியப்பு!

POST: 2011-10-20T14:45:27+05:30

உறவேட்டில்(Facebook) உறவாடும் உள்ளங்கள் இசைக்கும் பிறந்தநாள் வாழ்த்தின் மகரந்தம் என் மனத்தில் மகிழ்ச்சிமழை பொழியவைக்கிறது;வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு என் நெஞ்சில் வழிகின்ற தேன் துளிகளை எழுத்துப்பன்னீரோடு இழைத்துத் தெளிக்கிறேன்....