POST: 2011-10-03T18:09:27+05:30

One tree makes one lakh matchsticks but one matchstick can burn one lakh trees. Negative thoughts can burn all positive thoughts Be positive always ஒரு மரத்திலிருந்து ஓர் இலக்கம் தீக்குச்சிகளை பெறலாம். ஒரு தீக்குச்சியை உரசினால் ஓராயிரம் மரங்கள் கரிந்து போகும் எதிர்மறையான எண்ணம் எழிலார்ந்த கருத்துகளை சிதைக்கலாம் நம்பிக்கையோடு நல்லதை நினைப்போம்

POST: 2011-10-02T12:52:35+05:30

அறிவியல் வளர்ச்சியில் கலைச்சொற்களை உருவாக்குவது போல காந்திய வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் கலைச்சொற்கள் என்று பார்த்தால் அகிம்சை சத்தியாக்கிரகம் (பற்றுறுதி) சர்வோதயம் (அனைவர்க்கும் நன்மை) உண்ணாவிரதம் சத்திய சோதனை (உண்மையோடு உடன்படுதல்) கிராம சீர்திருத்தம் ஒத்துழையாமை (பொருந்தாதவற்றுக்கு) சட்டமறுப்பு சுதேசியம் சுயராஜ்யம் கைத்தொழில் மரபார்ந்த அறிவியல் கட்டுப்பாடு சகிப்புத் தன்மை (Tolerance) இந்தக் கலைச் சொற்களின் பட்டியல் முற்றுப்பெற்றதென்று கூறமுடியாது. வேண்டுமானால் காலத்திற்கேற்பச் சிலவற்றை ம ...

POST: 2011-10-02T12:46:18+05:30

தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற நம் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! முடிவில்லாக் கீர்த்தி பெற்றாய் ! புவிக்குள்ளே முதன்மையுற்றாய்! நீ வாழ்க ! வாழ்க ! வாழ்க நீ ! எம்மான் ! -என்று மகாகவி பாரதியார் போற்றிய மகாத்மா காந்தியடிகளின் 143வது பிறந்த நாளன்று, அவருடைய வாழ்க்கை நெறிப்பாடுகளை நினைத்துப் போற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

POST: 2011-09-30T14:16:03+05:30

International Translation Day is celebrated every year on 30 September on the feast of St. Jerome, the Bible translator who is considered as the patron saint of translators. The celebrations have been promoted by FIT (the International Federation of Translators) ever since it was set up in 1953. This is an opportunity to display pride in a profession that is becoming increasingly essential in the era of progressing globalisation.

POST: 2011-09-28T23:08:36+05:30

I am reminded of my account opening with Gmail wayback on 28.1.2005 and which has been my part and parcel of my career,interests and quest for tamil search. Its apt to greet on its 13th Birthday and wish many years of its growth and development. கூகுளு கூகுளு கூகுளு - அட குளுகுளு குளுகுளு கூகுளு

POST: 2011-09-27T20:27:59+05:30

Hopefully the eggs are fresh,Purists took objection and said I hope,the eggs are fresh,their objection was for Hopefully! when they approached a professor of english said both are acceptable.Purists retorted to the professor,You are like a priest practising celibacy for yourself but advocating adultery to the Parishioners....English language is blessed with more than million words with 1000 words are added to the language....

POST: 2011-09-21T13:40:56+05:30

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய மொழி...நடைபாதைக்கோயில்களை நாடு தாங்காது என்பது புது மொழி!! நடைபாதைக்கோயிலுக்கு நாளும் பூசை நடத்த வேண்டியதால் பொது மக்கள் சாலைகளின் குறுக்கே எந்நேரமும் நடக்கலாம். தமிழ்நாட்டில் 77,543,ராஜஸ்தானில் 58,253,கர்நாடகாவில் 2814 நடைபாதைக்கோயில் உள்ளன தினத்தந்தியின் 20.9.2011தலையங்கத் தகவல்

POST: 2011-09-20T21:38:35+05:30

முதுமை என்பது மனத்தால், குணத்தால், பழக்கத்தால் சுற்றுச்சூழலால் விளைவதாகும் என்று நம்பினர். உங்களுக்கு ஏன் நரை தோன்றவில்லை என்று கேட்டதற்குப் பிசிராந்தையார் கூறிய விடைப்பாடல் புறநானூற்றில் குறிப்பிடத் தக்கது. மாட்சியுடைய மனைவி, அறிவு நிரம்பிய மக்கள் எனக்கு வாய்த்த என் மனத்தைக் கவரும் அண்ணன் தம்பியர் நல்ல ஆட்சி நடத்தும் வேந்தன், சான்றோர்கள் என்னைச் சுற்றி வாழ்கிறார்கள். இதுதான் நரை வராமைக்குக் காரணம் என்பது பாடலின் பொருள்.