POST: 2011-09-19T17:21:06+05:30

திருவள்ளூர் என்று அழைக்கப்படும் இந்தப் புனிதமான பகுதி ஆழ்வார்களாலும் (1056 முதல் 1068 வரை) வள்ளலாராலும் பாடல் பெற்ற திருஎவ்வுளூர் என்ற பழம் பெயரையுடையது. வீரராகவப் பெருமானும், கனகவல்லித் தாயாரும் இந்த ஊர் மக்களை காத்து வரும் தெய்வங்களாக மக்கள் வணங்குகின்றனர். திருவள்ளூரில் பிறந்த பெருமக்கள் உலகப் புகழ் வாய்ந்தவர்கள்.

POST: 2011-09-19T16:44:13+05:30

புலவர்களை பழிக்கிறவன் புதைகுழிக்குள் போவான், புவியில் எங்கிருந்தாலும் அவன் தலையில் இடிவிழும்-அண்ணா

POST: 2011-09-16T14:04:29+05:30

பரதகண்டம் முதலில் வழங்கிய நிலையில், பல நாடுகளாக இந்தியா துண்டுப்பட்டிருந்தது. ஒன்றுபட்டு ஒரு வடிவம் தந்தாலும் கூட மாநிலங்கள் தம்மை நாடுகளைப் போலவே நினைக்கின்றன. இந்த நிலையில் தாகூர் கூட ஆறு கோடி கைகளால் இந்தியாவை வணங்குவோம் என்றார். ஆனால் பாரதியார் மட்டுமே முப்பது கோடி மக்கள் என்றும், அறுபது கோடி தடக்கை என்றும் இந்திய ஒருமையை சுட்டிக்காட்டிய ஈடற்ற கவியரசர்! பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடி முரசு கொட்டினார்!

POST: 2011-09-15T16:04:37+05:30

தாய் தன் மகனுக்கு பெயர் வைப்பது இயற்கை! ஆனால் மகன் தன் தாய்க்கு பெயர் வைத்த விந்தை நடந்தது பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நிகழ்வு

POST: 2011-09-15T16:03:43+05:30

தான் மட்டும் வளர்வது தான் மட்டும் வளர்வது! தன் தோள் வரை வளரவிடுவது!! தான் மட்டுமல்லாமல் பிறரரையும் வளர்த்த மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 103 பிறந்த நாள் தம்பி வா ! தலைமைத் தாங்க வா!! மறந்திடப்போமா மனங்கவர் வாசகம்.....

POST: 2011-09-15T15:48:37+05:30

காலத்திற்கேற்ப சிந்திக்கத்தக்க தலைவர்! கல்விப்பயிற்சியில்லாத கலகக்காரர்களை கனிவாலும்,கண்ணியத்தாலும்,கடமையுணர்ச்சியாலும் திருத்த முயன்றவர்! அண்ணாவை நினைக்கும் போது எவர் எவரால் எப்படி மதிக்கப்படுகிறார் என்று விளங்காத புதிராக இருக்கிறது!

POST: 2011-09-11T23:03:43+05:30

பெரியார் தன்னை விட அறுபது வயது இளையவர்கள் தலைமை தாங்கினாலும் ஏற்றுக்கொள்பவர்.தோழர் என்று அழைப்பார்.அது போய் மாண்புமிகு,மானமிகு என்று அழைத்துக்கொண்டு மிகுதியால் மிக்கவை செய்து தகுதியால் தாழ்ந்து விட்டோம்!