திருக்குறளில் இன்பத்துப்பாலும் ஒன்று காமத்துப்பால் என்று இதனைக் கூறுகின்றோம். காமம், காம இச்சை, காமக் களியாட்டம் என்னும் போது. அது வெறுக்கத்தக்கது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ‘மலரினும் மெல்லிது காமம்‘ என்று தானே இலக்கணம் புனைகின்றார். கலை நலம் வாய்ந்த காமத்தின் உண்மை அறிந்து அதன் பயனறிகின்றவர் சிலரே என்பது பொருள். அழகின் வடிவமே காமம் அறத்தில் கனிவதும் காமம். காமாட்சி, சிவகாமி என்ற பெயர்களில் உயர்நிலைப் பண்பையும், அச் சொற்களில் உணரலாம். காமம், காதல் என்ற இரு சொற்களும் ஒரே பொருண்மையுடையதாகவும் கருதலாம்.
Add a Comment