காதல், காமம் என்ற இரண்டு சொற்களும் நெடுங்காலமாக வழங்கப்படுகின்றன. உயர்ந்த உறவுகளைக் காதல் என்ற சொல்லோடு இணைத்துச் சொல்வது வழக்கம். உள்ளத்தோடு ஒட்டிய தொடர்பையே காதல் என்று குறிப்பிடலாம். பாலுணர்வை நினைக்கும்போது, உடம்பு தழுவிய இணைப்பையே பெரிதும் கருதுகிறோம். ஆகவே, உடல் உணர்ச்சியைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிட்டனர். காமம் என்பது பருவ எழுச்சி, மெல்லிய உடல் உணர்ச்சி, காதலில் உடற்கலப்பு அடங்கியிருந்தாலும், காமத்தைப்போல உடற்கலப்பு மீதூர்ந்து நிற்பதில்லை என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் வலியுறுத்தினாலும், காதல் என்ற சொல்லில் காமப் பொருளும், காமம் என்ற சொல் வந்த இடத்தில் காதற்பொருளும் உண்டு எனக்கொள்ளவும் இடமுண்டு. இரு சொல்லின் பொருளையும் இணைத்துக்காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டென்றால் அதனை அகம் என்று குறிப்பிடலாம் என்றார்.
Add a Comment