இந்த நிலையில் வாழ்க்கைக்கு விளக்கம் தரும்வகையில் புதிரா? புனிதமா? என்னும் இந்த நூல் பொலிவோடு வெளிவந்துள்ளது.
தொலைக்காட்சியில் பல்லாயிரக்கணக்கானவர் காத்திருந்து கண்டு மகிழும் மனநல மருத்துவர் டாக்டர் மாத்ருபூதம் அவர்களால் அளிக்கப்பெற்ற நல்ல தொடர் இது என்றே கூறலாம். பாரெங்கும் பாலியற் படிப்பு பரவி வருகின்றது. இதனை அறிவும் ஆர்வமும் இளைஞரிடையே பெருகி இளநகையமையப் பாலுணர்வை ஆராய்ந்து காட்டி பலரின் வினாக்களுக்குத் தெளிவான விடைகளை வழங்கி, அனைவரின் மனத்திலும் நீக்கமற நிறைந்த பெருமை, அருமை நண்பர் டாக்டர் மாத்ருபூதத்தின் தனித்திறமையாகும். ‘பாலியல் கூட்டம் பற்றி மட்டும்தான் சொல்லித் தரப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு பாலியல் பண்பாட்டை ‘வாழ்க்கையில் பாலியல் பெறும் பங்கைப் பற்றியும் சொல்லப் போகிறோம். ‘ஆறிலிருந்து அறுபதுவரை அன்றாட வாழ்வில் மக்களுக்குள்ள அனைத்துச் சிக்கல்களையும் ஆராய்ந்து பார்ப்போமே என்று தொடங்கும் மருத்துவக் களஞ்சியமாக, பாலியற் பனுவலாக, மணமக்களுக்கு வழங்கத்தக்க மகிழ்ச்சித் திறவுகோலாக ஆங்கிலம், தமிழ்வழக்குச் சொற்கள் பலந்த பலப்பு நடையில் இந்நூலை எழுதிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றி பாராட்டலாம். கண்ணெதிரே தோன்றி அவர் வழங்கிய வாய்மொழியே எழுத்தாக வடிவம் பெற்றுள்ளது.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
Add a Comment