பாலுணர்ச்சி என்பது இல்லறத்துக்கு முன்னும் பின்னும் இயல்பாக விளையும் உடல் உணர்வு என்றாலும், கண்ணும் கருத்தும் வைத்து, விழிப்போடு செயற்பட்டால் உடலுக்கு வரும் இடர்ப்பாடுகளை நாம் எளிதில் களையலாம். இவ்வாறு வருமுன் காக்கும் வாழ்க்கை ஏடாக இந்தப் பாலொழுக்கக் காவியத்தை நாம் பாராட்டி மகிழலாம்.
பால்வினை நோய், தேய்வு நோய் மற்றும் உடல் நோய்களெல்லாம் எப்படி மக்களைப் பாழாக்குகின்றன என்பது குறித்து மருத்துவர் கூறும் கருத்துரைகள் மாட்சியுடையன. ஒரு வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடம்போல வினா விடையாகச் செய்திகளை ஆசிரியர் சுவையாக வரைந்துள்ளார். எனவே, டாக்டர் மாத்ருபூதம் வழங்கும் இந்நூலை மாத்ருபோதம்‘ என்றே நாம் அழைத்து மகிழலாம்.
பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன்
Add a Comment