மக்கள் கவிஞர் கபிலன் கேட்பவர் மனங்கள் எக்களிக்கும் விதத்தில்
எழுதித் திரைச் சிகரத்தில் பாட்டரசராக உலா வருகிறார்.
எப்போதும் என்னைப் பரிவு பொங்கப் பாராட்டும் பண்பு கொண்டவர்.
எந்த முயற்சியிலும் நான் வெற்றி பெற முயன்றால்
மக்கள் கவிஞரின் அறிமுகத் தொடர்களைத் தான் கேட்பேன்.
அன்று (01.02.2003) தந்த அறிமுக வரியும் இன்று (02.02.2019) எழுதிய அறிமுகத்தொடரை என் இனிய நண்பர் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் திரு.எல்.ஆர்.சாமி அவர்கள் களி தெலுங்கு மொழியில் இரு கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளதை முகநூலில் வரைவதில் பெருமிதமடைகிறேன்.
—– ஔவை அருள்
=================================
అవ్వై అరుళ్కు శుభాకాంక్షలు
అతని చిరునవ్వు
కోకిల వాయించే పిల్లనిగ్రోవి వలే
నింగిలోని అర్ధ చంద్రాకారపు అందం
అతని అందం .
అతని కేశ సంపద
నెమలి పింఛం విరిసినట్లు
కొనలేరెవరూ అతన్ని వెలకి
మేడల మేడల పై వున్నవారైనా సరే
మంటుటెండలో నడిచినా నల్లబడడు
పూర్ణేందువును అల్లుతాడు చుక్కలను కలిపి ;
వెతికి వెతికి వెళ్ళినవాడు అతడు
తమిళ మాటలను విదేశ భాషల్లో కూడా
అతని ఊరు ‘అత్తిచూడి’ మా ఆది కవయిత్రి ఊరు
అవ్వయార్ ఊరు –ఒక గ్రంధం అతడు
అతని మాటలలో మరుమల్లెల సుగంధం
చెన్నై విశ్వవిద్యాలయం చదువు నేర్పిన తల్లి
నేర్చుకున్నాడు తమిళం ఆమె వద్ద
గీతలు గల పులి గీతల గుర్రం కాదు,అతడు
మానస పుత్రుడు మూడు చెంతమిళ్ శాఖలకు
మనవడు మహా పండితునికి
కమ్మటి తమిళ వంట ,కంప కవి కావ్య పు సొగసు
సందులు లేని ఈ చెరుకు గడఅతడు
குயில்ஊதும் குழல்போலச் சிரிப்பான்; வானின்
குருத்துநிலா ஒளிபோன்ற அழகன்; அந்த
மயில்தோகைக் கூந்தல்போல் அடர்ந்த கேசம்;
மாளிகையில் விலைபோகும் மனிதன் இல்லை;
வெயில்மீது நடந்தாலும் கறுக்க மாட்டான்;
விண்மீனைக் கூறுகட்டி நிலவு செய்வான்
அயல்மொழியில் தமிழ்ச்சொல்லை ஆய்ந்தான்;
எங்கள் அவ்வையத்தாய் பெற்றெடுத்த ஆத்தி சூடி;
மருக்கொழுந்து வாசம்தான் பேச்சு; சென்னை
மாநிலததுப் பல்கலையில் தமிழைக் கற்றான்;
கறிக்குழம்பு உண்ணாதத சைவப் பிள்ளை;
வரிப்புலிதான் வரிக்குதிரை அல்ல; முப்பால்
வளர்ப்புமகன்; முதறிஞர் பேரன்; உப்புக்
கரிக்காத தமிழ்உணவு; கம்பன் செய்யுள்;
கணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து.
கவிஞர் கபிலன்
கல்லூரி நிழலில்.
01.02.2003
*************************
జుట్టు దువ్వుకొలేము కెరటాలను చూస్తూ
తమిళ్ నాడు చూడవచ్చు అవ్వై అరుళు ను చూస్తే
ఇద్దరు మహా పండితులు వుండగానే ,ఒకే కుటుంబంలో
మూడో పండుతునిగా చోటు సుస్థిరం చేసుకున్న వాడు
ఇతర భాషా పరిశోధన చేసినవాడు ,చెంతమిళ్ లోనే
‘షేక్స్ పియర్’ నేర్పడంలో అద్విదీయుడు
తెల్లవారినా ప్రకాశించే ఆరని చందమామ
వెనక్కి నెట్టినవాడు తాత ,తండ్రులను
అనువాదంలో ,నిలిచినవాడు అగ్రగామిగా
అధిపతి అనువాద శాఖ కి
సామెత ఒక పాదం మాత్రం ,ద్విపద అయితే తిరుక్కురళ్
మూడు పాదాలు హైక్కు అయితే చతుష్పాదాలుగా
వడి వడిగా ఎదిగినప్పుడు ‘వెణ్ పావు’ గా ఎదిగి
కొలవలేని ఎత్తులో వున్నాడు పద్యం లా
తలయెత్తి నిలబడి వున్నాడు సుప్రసిద్ధుడుగా
ప్రకీర్తిస్తున్నాను నిన్ను శుభ్రహ్మణ్య భారతి మాటలలో
మనసుకి శక్తి పెంచుతున్నాడు
బ్రతుకుతున్నాడు వినమ్రంగా
సుభ్రహ్మణ్య భారతి విశ్లేషణలు
ప్రయోజనకరంగా వ్యాసాలు చేసాడు , వారు
బ్రతకాలి భ్రాతకాలి చిర కాలం
— అభివాద్యం
—కపిలనుకి
అనువాదం: ఎల్. ఆర్. స్వామి
அலைபார்த்துத் தலை வாரமுடியாது
ஔவை அருள் பார்தது தமிழ்முகம் காணமுடியும்
ஒரே குடும்பத்தில் இரண்டு தமிழறிஞர்கள் இருக்க
மூன்றாம் அறிஞனாய் தன்னை முன்மொழிந்து கொண்டவன்
அருந்தமிழில் அயல் மொழியை ஆய்ந்தவன்
சேக்ஸ்பியர் முனைவரில் தோய்ந்தவன்
விடிந்த பிறகும் வெண்ணிலாவாய்க் காய்ந்தவன்
தாத்தா, தந்தையாய்த் தன்னை மொழிபெயர்த்ததால்
மொழிபெயர்ப்புத்துறையில் இயக்குநராக இருக்கிறான்
ஒரு வரி பழமொழி,
இரு வரி திருக்குறள்,
மூவரி ஐக்கூ,
நான்கு வரி வெண்பா என்று
வரிவரியாக வளர்ந்து தற்போது
அளவில் அகப்படாத ஆசிரியப்பாவாய்
அமைந்த புகழோடு நிமிர்ந்து நிற்கிறான்!
பாரதியின் வார்த்தையால் உன்னைப் பாராட்டுகிறேன்
வல்லமை வளர்ப்பவன், வணங்கி வாழ்பவன்
பாரதி பதில்கள் – பயனுள்ள பனுவல்
படைத்தவன் நீ வாழ்க !
—– மக்கள்கவி கபிலனின் கற்கண்டுத் தொடர்கள்
02.02.2019
Add a Comment