============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 264)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 11)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
கொள்கைச் செயற்பாடு
======================
4. பல்கலைக் கழகத் துறைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்கு களும், மாநாடுகளும், பணிப்பட்டறைகளும் உயர் ஆய்வுக் கூட்டங்களும் உலகளாவிய நிலையிலும், நாடளாவிய நிலையிலும், மாநிலம் தழுவிய நிலையிலும் நடத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு அளவிலான மாநாடுகளில் பல்கலைக் கழகப் பேராளர்கள் கலந்து கொண்டு பல்வேறு நாடுகளிலும் கட்டுரைகள் வழங்கியுள்ளனர்.
பல்வே நாடுகளுக்கு ஆய்வுத் தகைமையாளராகவும் சென்று வந்துள்ளனர் பன்னாட்டளவில் புகழ்பெற்று வெளிவரும் ஆய்விதழ்களில் சுமார் நூறு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை இலண்டன் கேம்பிரிட்ஜ், ரோம், நேப்பில்ஸ், (தோபன்ஹேகன், ஆஸ்லோ, அமெரிக்கா டோக்கியோ, ஹாங்காங், பாங்காக், வியன்னா, கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்து வெளியிடப்படுபவை. பன்னாட்டு ஆய்வாளர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கும் ஆய்வுப் பணி நிமித்தம் வருகை புரிவது தொடர்கிறது.
5, தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒரு தனிநிலை உயர் ஆய்வு மையம், இத்துடன் இணைந்துள்ள கல்லூரி ஏதும் இல்லை. இங்கு பல்வேறு துறைகளில் முழுநேர, பகுதிநேர ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்’ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய நாடுகளில் இருந்து வரும் ஆய்வாளர்களுக்குத் தமிழ் மொழி, பண்பாடு, கலை ஆகிய வற்றைக் கற்பிக்கும் களமாகவும் இது திகழ்கிறது.
Add a Comment