============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 265)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 12)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
கொள்கைச் செயற்பாடு
======================
5. தமிழக அரசுப் பணிகளில் பணியாற்றும் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கும் இந்தியக் காவல் பணியாளர்களுக்கும், இந்திய வனப் பணியாளர்களுக்கும் மொழிச் சிறுபான்மை அலுவலர்களுக்கும் ஆண்டுதோறும் மொழிப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
6. 1997 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நில அறிவியல் துறை, பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. சிற்பத்துறை 1996 ஆம் ஆண்டில் இந்தியக் கலை வரலாற்றுக் கழகத் தேசிய மாநாடு நடத்தியது. கல்வெட்டியல், நாணயவியல், ஊர்ப்பெயர் தேசிய மாநாடுகள் கல்வெட்டுத் துறையால் நடத்தப்பட்டுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து உலக சைவ சித்தாந்த மாநாடு, இந்தியச் சமூகவியல் ஆய்வு மாநாடு, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாடு போன்றவை நடைபெறவுள்ளன. இவ்வாறு தமிழியல் ஆய்வுக்கு ஊக்கம் தரும் பலதரப்பட்ட மாநாடுகளின் நிலைக்களனாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருப்பெற்றுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுரை 32 அறக்கட்டளைகள் புரவலர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இவ்வறக்கட்டளைகள் சார்பில் ஆய்வுப் பொழிவுகள் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பெற்று வருகின்றன. தெலுங்கு, இசுலாமிய, வைணவ சமயங்கள், பாரதிதாசன் முதலிய பல இருக்கைகள் நிறுவப்பெற்று இவை தொடர்பான ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன.
Add a Comment