============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 266)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 13)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
கொள்கைச் செயற்பாடு
======================
7. இதுவரை முனைவர் பட்டத்துக்கும, ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்கும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 73 மாணவர்கள் உரிய பட்டங்கள் பெற்றுள்ளனர். பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வு உதவியாளர்கள் ஆகியோர் எழுபதுக்கும மேற்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு, பலிகலைக் கழக நல்கைக்குழு (U.G.C.), இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (I.C.W.R.), இந்தியச் சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் (I.C.S.S.R.), இந்தியத் தத்துவ ஆய்வுக் கழகம் (I.C.P.R.), இந்திய மொழிகள் மைய நிறுவனம் (C.I.I.L.) மனிதவள மேம்பாட்டுத்துறை (M.H.R.D.), மைய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை (D.S.D.), கடல்வள மேம்பாட்டுத்துறை (D.O.D.), மின்னணுவியல் துறை (D.O.E.), தேசிய அருங்காட்சியகம், தென்னகப் பண்பாட்டு மையம் (S.Z.C.C.), தேசிய நாடகப் பள்ளி (N.S.D.), சங்கீத நாடக அதாதமி முதலிய நிறுவனங்களும் திட்டங்களுக்கு நல்கைகள் வழங்கி வருகின்றன. புதிய திட்டங்களுக்கான கருத்துருக்களும் இத்தகைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இவ்வாய்வேடுகள் நூல்களாக வெளிவரும்போது அவை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்துவனவாய் அமையும்.
Add a Comment