POST: 2022-02-11T09:27:11+05:30

சிற்பி பெற்ற சீர்த்தி !

கவிதை ,உரைநடை , மொழியாக்கம் ,காவியம் ,திறனாய்வு முதலிய துறைகளில் தோய்ந்த தன்னிகரற்ற தொண்டாற்றி வரும் பெருமிதமும் பெருந்தகவும் கொண்ட கவித்திலகம் சிற்பியைத் தேடித் தாமரை விருது வழங்கப்பட்டுள்ளது .

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் என்பதைக் காண முடிந்தது .

தாமே பிறருக்கு விருது வழங்கும் தனிக்கனிவும் உங்களைப்போல் பிறரிடம் காண்பது அரிது .

தாங்கள் பொறுப்பேற்ற பிறகு சாகித்திய விருது உரியவர்களைச் சேர்வதை எண்ணி உலகமே பாராட்டுகிறது .

செயலால் – சிந்தையால் புகழோங்கி நிற்கும் பெரும் பேராசிரியர் சிற்பியைப் பாராட்டுவது எனக்குப் பெருமையாக அமைகிறது .

உலாச் செல்வது போல மருத்துவமனை செல்வதும் திரும்புவதுமாக வருந்தும் எனக்கு எழுத நேரம் சிறிது தள்ளிச் சென்று விட்டது .

செல்வன் சிவ சதீஷ்குமார் கையில் கொடுத்த கடிதம் எப்படியோ தவறிவிட்டது .

வாழ்க சிற்பி !
வளர்க சிற்பியின் தனிப்புகழ் !!

பரிவுள்ள

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *