POST: 2022-05-03T10:22:32+05:30

நினைவை மீட்டும் ஒளிப்படம்

பின்வரிசையில் முதலில் காண்பவர்

தமிழ்ப்பேரா.சங்கரநாராயணன். ஆங்கிலத்திலும் வல்லவர்.சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.
அவர் மகன் திருவள்ளுவன், உரைவேந்தர் மகன் ஒளவை மெய்கண்டான், நான் மூவரும் ஒருசாலை மாணாக்கர்.

இவர் மகன் திரு மெய்கண்டதேவன் ஆங்கிலப்பயிற்றுநராகத் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றியவர். பின், இ.ஆ.ப. அலுவலராகி, அரசு செயலராகப் பணி நிறைவுற்றவர்.

அடுத்து நிற்கும் உரைவேந்தர் ஒளவை துரைசாமி மகன் நாவரசர் ஒளவை நடராசன், அரசின் இ.ஆ.ப. அல்லாத முதல் – ஒரே – செயலர். தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலான பொறுப்புகள் வகித்தவர்.

அமர்ந்திருப்பவர்கள்

தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரும்
தமிழன்பர் கலையன்னை இராதா தியாகராசன் அவர்களும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *