







நீர் வழிப்படூஉம் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர் தேவிபாரதி என்கிற ராஜசேகரன் அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செனாய் நகரில் (30.5.2025-வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.15 மணிக்கு பத்திரப்பதிவானது
நக்கீரன் Volume 38 Issue Number 16
ஜுன் 2025 11-13
பக்கம்-28-29
கலைஞரின் கனவு இல்லம்! எழுத்தாளர்களுக்கு மகுடம்
கலைஞர் விரும்பிய எழுத்துத்துறைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின்,
அவர் தலைமையிலான அரசில், படைப்பாளிகளை பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியாவில் வேறெந்த மாநில அரசும். ஏன் ஒன்றிய அரசே செய்யாத ஒரு வியத்தகு சாதனையை அமைதியான முறையில் செய்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி விருதுக்குழு, மாநில மொழிகளில் ஆகச்சிறந்த படைப்புகளை தருகிற இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்து சாகித்திய அகாடமி விருது வழங்குகிறது.
தமிழ் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், புவியரசு, ஈரோடு தமிழன்பன், பொன்னீலன் என ஏராளமான ஆளுமைகள் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார்கள்.
விருதாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திர மும், விருதுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2021-ல் தி.மு.க. அரசு அமைந்து, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், எழுத்தாளர்களை உயர்ந்த இடத்தில் வைத்து கௌரவிக்கும் வகையில், கலைஞர் கனவு இல்லம்’ என்ற புதிய திட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி விருதுபெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்புக்
கான சாகித்திய அகாடமி விருதுபெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழக அரசு சார்பில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் செம்மொழி விருது’ பெறுபவர்களுக்கும் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் அவர்கள் விரும்பும் இடத்தில் சொந்தமாக வீடு வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்படும் வீடு ஒன்றை விருதாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கள் சிற்பி பாலசுப்பிரமணியம், புவியரசு, ஈரோடு தமிழன்பன் உட்பட பலரும் சொந்தமாக தமிழக அரசு வழங்கிய வீட்டைப் பெற்றுள்ளார்கள்.
2023-ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி எழுதி வெளிவந்த ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.
எழுத்தாளர் தேவிபாரதி தமிழக அரசிடம் கலைஞர் கனவு இல்ல வீடு வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.
வலிப்பு நோய் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
பொருளாதார ரீதியாக எந்த பின்புலமும் இல்லாத நிலையில் எழுத்தாளரின் மருத்துவச் சிகிச்சை கேள்விக்குறியாகி மிகவும் நெருக்கடி யான நிலை ஏற்பட்டது.
இலக்கிய நண்பர்கள் சிலருக்கு தகவல் தெரிந்து அவர்களால் முடிந்தவரை உதவினார்கள்.
சிகிச்சைக்கு கூடுதலான செலவு ஏற்பட்ட நிலையில், எழுத்தாளருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்கிற தகவலை முதல்வரின் பார்வைக்கு நக்கீரன் சார்பாகக் கொண்டு சென்றோம்.
ஒருமாத காலம் சிகிச்சையில் இருந்த எழுத்தாளர் தேவிபாரதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.
அடுத்ததாக, எழுத்தாளர் தேவிபாரதி. கலைஞரின் கனவு இல்லம் பெறுவதற்கான தொடர் பணிகளையும் நக்கீரன் சார்பாக முன்னெடுத்தோம்.
தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது துறையின் அதிகாரிகளை வேகமாக செயல்பட வைத்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ஒளவை அருள், இதற்கான நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டார்.
நக்கீரனின் முயற்சி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி மற்றும் அதிகாரிகளின் தொடர்ச்சியான, துரிதமான பணிகளால், சென்னை, செனாய் நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலுள்ள வீடு தேர்வு செய்யப்பட்டது.
ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பு கொண்ட அந்த வீட்டின் பத்திரப்பதிவுமே
30ஆம் தேதி நடைபெற்று, வீட்டின் பத்திரம் மற்றும் சாவியை எழுத்தாளர் தேவிபாரதியிடம் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ஒளவை அருள் ஒப்படைத்தார்.
அதிகாரிகள் மற்றும் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எழுத்தாளர் தேவிபாரதி நம்மிடம், “முதல்வர் மூலம் எனக்கு மருத்துவ உதவி மற்றும் வீடுபெறும் நிகழ்வுகளுக்கு உறுதுணையாய் இருந்த நக்கீரனுக்கு நன்றி” என்றவர், மேலும்,
“சாகித்திய அகாடமி விருது பெற்றவர் களுக்கு ஒன்றிய அரசு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து பாராட்டி அனுப்பிவிடுகிறது.
ஆனால் தமிழக அரசு சொந்தமாக வீட்டை கொடுத்து எங்களைப் போன்றவர்களை வாழ்நாள் முழுக்க நம்பிக்கையோடு வாழ வைக்கிறது.
இன்றுவரை எழுத்தாளர்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வு என்பது வறுமையோடு பின்னிப் பிணைந்தது தான்.
அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கையை தமிழக அரசு, குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்” என்றார்.
மறைந்தாலும், தமிழ்நாட்டின்
படைப்பாளிகளுக்கு எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் தந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் கலைஞர்!
www.nakkheeran.in
-ஜீவா தங்கவேல்


Add a Comment