தினமணி – 9 1 2023
பக்கம் எண் : 2
மொழியும் பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்
ந அருள்
சென்னை, ஜன.9:
மொழியும், பண்பாடும் கவிஞர்களின் அடிநாதம் என தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தெரிவித்தார்.
சென்னை புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் சார்பில் தமிழகத் தில் 400 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து ‘கவிநானூறு எனும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது :
தமிழ் இலக்கியத்தில் புறநானூறு 1893 – இல் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரால் தொகுத்து வெளியிடப்பட்டது.
அதையடுத்து கடந்த 1923 – இராகவையங்கரால் அகநானூறு வெளியிடப்பட்டது.
அதேபோல, தற்போது ‘ கவிநானூறு ‘ எனும் நூல் 128 பெண் கவிஞர்கள் உள்ளிட்ட 400 பேரின் கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழக அரசும் 33 வகைகளாக புத்தகங்களைப் பிரித்து பரிசளித்து புதிய புதிய புத்தகங்கள் வெளிவருவதை ஊக்குவித்து வருகிறது.
சிறந்த படைப்புகளை தேர்வு செய்து அதனை வெளியிட ரூ.50, 000 உதவியும் வழங்குகிறது.
நாட்டுயுடைமை திட்டத்தில் பாரதி நூல்களுக்குப் பிறகு 100 படைப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.
நூலாசிரியர்களைப் போற்றி அவர்களுக்கு உதவுவதையே தமிழக அரசும் தமிழ் வளர்ச்சித் துறையும் கடமையாகக் கொண்டுள்ளன.
கலை மற்றும் பண்பாட்டை அடி நாதமாகக் கொண்டு படைப்பை கவிஞர்கள் உருவாக்குகின்றனர்.
கவிஞர்களில் ரவீந்திரநாத் தாகூருக்கு கிடைத்த வசதி வாய்ப்புகள் ஏதும் மகாகவி பாரதிக்கு
கிடைக்கவில்லை.
அவரின் காணி நிலம் கனவு கனவாக போனது.
ஆனால், தற்போது
படைப்பாளர்கள் பாராட்டப்படுவது வரவேற்புக்குரியது என்றார் அவர்.
எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் :
உலகில் வாசிக்கப்படும் மொழி தான் வாழும் நிலையை அடையும்.
ஆகவே, தமிழ் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிப்பதுடன்
குழந்தைகளுக்கும் அதைக் கற்றுத்தர வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, கீதம் முத்துசாமி வரவேற்றார்.
கீதம் பப்ளிகேஷன்ஸ்,
பெருங்குடி,
சென்னை 96
பெருமையுடன் அழைக்கும் கவிநானூறு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
நாள் : 09-01-2023 திங்கட்கிழமை
மதியம் 2.00 மணி
இடம் : 46வது சென்னைப் புத்தகக்காட்சி விழா அரங்கம்,
ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல்
கல்லூரி, நந்தனம், சென்னை
இறை வணக்கம் :
கவிஞர்.தமிழ் நேசன்
வரவேற்புரை:
பாவலர் கொழுமம் ஆதி
தலைமை:
முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
நூல் அறிமுகவுரை :
முனைவர்.ச.த.அருள்சோதி
நூலாசிரியர்கள் அறிமுக உரை
:
கவிஞர்.சி.ஞானப்பிரகாசம்
சுகாதார ஆய்வாளர், சென்னை மாநகராட்சி
நூல் வெளியிடுபவர்:
திரு. பாரதி கிருஷ்ணகுமார்
எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
நூலினைப் பெற்றுக் கொள்பவர்:
திரு. ராசி அழகப்பன்
எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்
பதிப்புரை:
முத்துசாமி (எ) ஞானசி
நிறுவனர் : கீதம் பப்ளிகேஷன்ஸ்
400 கவிஞர்கள் சார்பாக ஏற்புரை :
கவிஞர் செ.பா.சிவராசன்
400 கவிஞர்கள் சார்பாக நன்றியுரை :
கவிஞர் கனகலட்சுமி
கீதம் – முத்துநாடு பப்ளிகேஷன்ஸ்

Add a Comment