பாராட்டுக்கூட்டம்
சென்னையில் 28.9.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் சவேரா உணவக அரங்கத்தில் எஸ்ரோ நல அறக்கட்டளையின் 18 ஆவது ஆண்டு விழாவில் எஸ்ரோ நிறுவனர் டாக்டர் இ.கே.தி.சிவகுமார் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவிக்கு மடிக்கணினி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராசன் வழங்கினார்.
உடன் ஆர் எம் கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம்,
விஐடி பல்கலைக் கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்,
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் ,
ஏ.வி.ஆர். அசோசியேட் சேர்மன் ஏ.வி.ராதாகிருஷ்ணன்,
சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் முனைவர் வீ.மணிமொழி.
இந்த விழாவில் டாக்டர் இ.கே.தி.சிவகுமாரின் 40 ஆண்டு கால சமூக சேவைகள் குறித்த ஆவண குறும்படம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்குகொண்டு வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்தேன்.

Add a Comment