தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்
திருக்குறள் திருப்பணித் திட்டம் தொடக்க விழா
பயிலரங்கம் -1
நாள் : 11.09.2025 (வியாழக் கிழமை)
திருவள்ளுவராண்டு 2056 / ஆவணி-26
நேரம் : முற்பகல் 10.00 மணி
இடம் : சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
முனைவர் ந.அருள்
இயக்குநர்.தமிழ் வளர்ச்சித் துறை
தலைமையுரை
திரு.எம்.பிருத்திவிராஜ், இ.ஆப,
துணை ஆணையர் (கல்வி) (மு.கூ.பொ.).
பெருநகர சென்னை மாநகராட்சி
கருத்துரை
திருமதி ஜே. வசந்தி,
கல்வி அலுவலர் I. பெருநகர சென்னை மாநகராட்சி
திரு. பெருமாள்
வருவாய் கோட்ட ஆட்சியர், வட சென்னை,
திரு.கே.தணிகைவேலு,
கல்வி அலுவலர்-II, பெருநகர சென்னை மாநகராட்சி
திரு.யு.முனி ராமையா,
உதவி கல்வி அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி
திருமதி எஸ். வேதவல்லி,
உதவி கல்வி அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி
திருமதி இரா.வைலம்மாள்,
தலைமையாசிரியர், சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்
திருக்குறள் ம.சக்கரவர்த்தி
திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர். நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர், உலகத் திருக்குறள் சமுதாய மையம்.
பயிற்றுநர்கள்
பேராசிரியர் முனைவர் இரா. ஆரோக்கியமேரி, திருக்குறள் ஞானப்பீட விருதாளர், இணைச் செயலாளர் உலகத் திருக்குறள் சமுதாய மையம். திருக்குறள் தூதர் திருமதி எ. கோட்டீஸ்வரி, (தமிழாசிரியர்,அயனாவரம்) உலகத் திருக்குறள் சமுதாய மையம்.
நன்றியுரை திருமதி வே. சாந்தி,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
நாட்டுப்பண்
செய்தி வெளியீடு எண்: 2141
நாள் : 11.09.2025
செய்தி வெளியீடு
திருக்குறள் திருப்பணித் திட்டம் தொடக்க விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ் நாடு முழுவதும் ‘திருக்குறள் திருப்பணிகள்’ திட்டம் செயற்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பிற்கிணங்க சென்னை மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணி திட்டம் இன்று 11.09.2025
(வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு பெரம்பூர் சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர்.
ந. அருள் வரவேற்புரை ஆற்றினார்.
வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் திரு. பெருமாள், பெருநகர சென்னை மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்கள்
திருமதி எஸ். வேதவல்லி, திருமதி செல்வகுமாரி, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர் முனைவர் கு. மோகனராசு, உலக திருக்குறள் சமுதாய மையத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் திரு. ம. சக்கரவர்த்தி, திருக்குறள் திருத்தூதர் முனைவர் குமரிச் செழியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உலக திருக்குறள் சமுதாய மையத்தின் இணைச் செயலாளர் திருக்குறள் ஞானப்பீட விருதாளர் பேராசிரியர் முனைவர் இரா. ஆரோக்கியமேரி மற்றும் உலகத் திருக்குறள் சமுதாய மையத்தின் திருக்குறள் தூதர் திருமதி எ. கோட்டீஸ்வரி ஆகியோர் திருக்குறள் திருப்பணி திட்டத்தில் பங்கு கொண்ட நூறு மாணவிகளுக்கு முதல் பயிற்சி வகுப்பு வழங்கினார்கள்.
45 நிமிட திருக்குறள் பயிற்சிக்குப் பிறகு தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி வே. சாந்தி நன்றியுரையாற்றினார்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment