வியாழக்கிழமை (31.7.25) அன்று மதியம் 2.30 மணி அளவில் கோவை தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் முனைவர் அன்பரசி மற்றும் உதவியாளர் திருமதி சுகந்தி இருவரையும் சந்தித்து அலுவல் பதிவேடுகளை பார்வையிட்டும் திட்டப் பணிகளை குறித்தும்
ஆய்வு செய்தேன்.
கோவையில் அமைந்துள்ள சக்தி குழும அலுவலகத்தில் அளவில் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கத்திற்குப் பிறகு சக்தி குழுமத்தின் தலைவர் திரு மாணிக்கம் அவர்களை சந்தித்து அளவளாவி மகிழ்ந்து அவர் அருகில் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டேன்.
தலைவரின் நேர்முக உதவியாளர் திரு மகேந்திரன் அவர்களையும் சந்தித்து உரையாடினேன்.

Add a Comment