WhatsApp Image 2025-04-18 at 12.14.46 PM (2)

மருத்துவம்+நற்றமிழ்+திருத்தலப்பணி=நலங்கிள்ளி

23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போது
கொற்கை கணபதி
கொற்கை திருமகள்
அருள்மிகு மருந்தீசர்
அருள்மிகு நீலாம்பிகை
ஒன்பாவை – கோள்கள்
கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.

பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்திலகமாகவும்
நற்றமிழ் நம்பியாகவும் திருத்தொண்டுப் புரிபவராக மிளிரும் மாமா தன் குடும்பத்துடன் பொன்னேரி வாழ் பெருமக்களுடன் 16.4.25
புதன்கிழமையன்று இனிய தமிழ்க் கடவுளாம் வெற்றிவேல் முருகன் திருக்கோயிலுக்கு
திருக்குட நன்னீராட்டு நாண் மங்கல விழாவில் திருவாசக செந்நாவலர் சற்குருநாத ஓதுவாரின் இன்னிசை நிகழ்வில் கலந்து கொண்டு மருத்துவர் நலங்கிள்ளி அவர்களையும் அக்கா சுதாவையும் வாழ்த்தி பொன்னாடை சூட்டி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *