

கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டு வியந்துப் பாராட்டினேன்.
மண்டல துணை இயக்குநர்
திரு சுந்தர் மற்றும் உதவி இயக்குநர் திருமதி கனகலட்சுமி கண்காணிப்பாளர் திரு ஜெகநாதன் மற்றும் பணியாளர்கள் ஒருங்கே ஒளிப்படம் எடுத்துக்கொண்டு பிறகு தமிழ்ப் பண்பாட்டு மையத்திலுள்ள அரங்கினையும் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.


Add a Comment