உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாயச்சிவிட வேண்டும்
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்
இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோமில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.
பாவேந்தர் பாரதிதாசன்

Add a Comment