உலகில் பார்க்காத நாடுகள் இல்லை என்பதனால் திரும்பி வர முடியாத வானுலகம் சென்றுவிட்டாரே பெருங்கவிக்கோ!
போராட்டமே தலைமைக்குணம்
யாருக்கும் அஞ்சாதவர்
துணிந்து பேசும் தகுதிச்சான்றோர்
என் அப்பாவின் நெருங்கிய நண்பர்
நாங்கள் மூவரும்(கண்ணன், அருள், பரதன் )பெரியப்பா என்று மகிழ்ந்து அழைக்கும் பெருங்கவிக்கோ அவர்கள் வெள்ளிக்கிழமை (4.7.25)
இரவு தானாகவே தானியில் ஏறிக்கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது வேறொரு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று வழிகாட்டி விட்டார்கள்
அடுத்த மருத்துவமனை சென்று சேர்வதற்குள் அருகில் அமர்ந்து இருந்த தோழர் மீது தோள் சாய்ந்தவுடன் உயிர் நீங்கிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு
மலேசியா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டபோது மூத்த மகன் திருவள்ளுவன் வேண்டாம் என்று தடுத்தாட்கொண்டார்.
1977 முதல் 2024 வரை தொடர்ந்து 47 ஆண்டுகளாக உலகில் செல்லாத நாடுகள் இல்லை.
10 முறைக்கு மேல் சென்ற நாடுகளை தொடர்ந்து சென்று வந்ததோடு உலகம் சுற்றும் பெரும் தொழிலதிபர்களையும் விஞ்சிய
கவிக்கோமானாவார்.
நோபல் பரிசு பெறுவது எப்படி என்று அறிந்து கொள்வதற்காகவே ஸ்வீடன் நாட்டிற்கு நேரில் சென்று பரிசுக் குறித்த நெறிமுறைகளை நுணுக்கமாய் அறிந்து வந்ததோடு
அனைவரும் படிக்கத்தக்க நூலாகப் படைத்து மகிழ்ந்தார்.
சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கிய வகுப்பில் தோழனாய் அறிமுகமானவர் தான்
பெருங்கவிக்கோ அவர்களின் அருமைப் புதல்வர் முத்துராமலிங்க ஆண்டவர் ஆவார்.
அன்று தொடங்கி நாளது வரை
ஆல் போல் தழைத்திருக்கும் எங்கள் நட்பு மூத்த தலைமுறையின் உறவின் நீட்சியாகும்.
கடந்த ஏழு திங்களுக்கு முன்பு
9.11.24 அன்று அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தொண்டறச் செம்மல்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஓயாத சிரிப்பலையின் மத்தியில் எடுத்த ஒளிப்படம் இன்றும் நினைவில் நீங்காமல் பெரியப்பா சொல்லிக் கொடுத்த பாடங்கள் பசுமையாகவுள்ளது.
அவருடைய தன்விவரக் குறிப்பினை அனைவரின் பார்வைக்கும்
பெருங்கவிக்கோ
முனைவர்
வா. மு. சேதுராமன்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 9.2.1935 இல் பிறந்தார்.
கல்வித்தகுதிகள்
புலவர் பட்டம்
, பி.எட்., எம் ஏ பிஎச்.டி.,
மக்கட்செல்வம்
மகன்கள்
வா.மு.சே. திருவள்ளுவா்,
வா.மு.சே. கவியரசன்,
முனைவர்
வா.மு.சே. ஆண்டவர்,
முதல்வர் கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி
அண்ணா நகர்
வா.மு.சே.தமிழ் மணிகண்டன்,
மகள்
வா.மு.சே. பூங்கொடி
வகித்த பதவிகள்
திருவல்லிக்கேணி இசுலாமிய உயர்நிலைப்பள்ளியில் 34 ஆண்டுகளாக தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
மேனாள் தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம் (மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம்)
உலக அமைப்பாளர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
நூல்கள்:
1. நெஞ்சத்தோட்டம்
2. தாயுமானவர் அந்தாதி
3. தமிழ் முழக்கம்
4. எண்ணச்சுடர்
5. ஐயப்பன் பாமாலை
6. தாய்மண்(காவியம்)
7. இருபது கட்டளைகள்
8. பற்றிலான் பற்று
9. சிந்தனைச்சுடர்
10. பன்மணி ஒலிகள்
11. உணர்வின் ஊற்று
12. வெற்றி மகள்
13. புதிய பாதை
14. கவிதை மழை
15. இருண்ட மேகங்கள்
16
நெஞ்சத்தோட்டம்
, 17 ஐயப்பன் பாமாலை,
18 தமிழ் முழக்கம்,
19 தாய் மண்,
20 சேது காப்பியம்,(12 காண்டங்கள்)
21 எழுதுகோலே உனக்கோர் எச்சரிக்கை
22 கோலாலம்பூர் மகாமாரியம்மன் பிள்ளைத்தமிழ்
உள்பட 85 நூல்களை எழுதியுள்ளார்.
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப்
பதிப்பித்தவர்.
விருதுகள்
1. கலைமாமணி பட்டம் (1990)
(தமிழக அரசால் வழங்கப்பட்டது)
2. இயற்செல்வம் பட்டம்
டாக்டர் கலைஞர் முத்தமிழப் பேரவை அளித்தது
3. அய்யன் திருவள்ளுவர் விருது -2001
(தமிழக அரசால் வழங்கப்பட்டது).
4. கலைஞர் பொற்கிழி விருது (முரசொலி அறக்கட்டளை )
5. உலகின் உன்னதக் கவிஞர்
(2006ஆம் ஆண்டு மங்கோலியா நாட்டில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில் வழங்கப்பட்டது.
6. தினத்தந்தி பத்திரிக்கை சார்பாக இவருக்கு ‘சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழ்அறிஞர் ‘‘விருது’’ 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
1. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் 1977-2014 வரை நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பல மாநாடுகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியமை.
2. மதுரையில் நடந்த 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் முக்கியப் பங்கேற்றல்(1981)
3. மலேசியாத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கு கொண்டார்.
4. இந்திய நூலாசிரியர் மன்றம் பீகாரிலுள்ள இராஞ்சியில் நடத்திய 15ஆம் தேசிய மரபொழுங்குக் கூட்டத்தில் பங்கேற்பு (1989).
5. அமெரிக்காவில் சாந்தியாகுவில் நடந்த தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பு. அமெரிக்கத் தமிழர்களால் உலகத் தமிழ் ஒளி பட்டம் அளித்து சிறப்பிக்கப் பெற்றார்.
6. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின்
நிறுவனராக இருந்தவர்.
7. தமிழ்ப்பணி திங்கள் இதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளாக நடத்தி வருபவர்.
8. உலகில் உள்ள 100 நாடுகளுக்கு மேல் கவிஞராக சென்று பாராட்டுப்பெற்றவர்.
9. உலகில் தமிழர் நலனுக்காக உலக நாடுகளை ஐம்பது முறைக்கு மேல் பயணம் செய்த கவிஞர்
10. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது தீராப் பற்றுக்கொண்டவர்
மறைவு – 04.07.2025
முகவரி:
எண். 10/2,
தாராசந்த் நகர்,
பிரதானசாலை,
சேது இல்லம்,
சாலி கிராமம்,
ஆஞ்சநேயர் அடுக்ககம்,
விருகம்பாக்கம் அஞ்சல்
சென்னை – 92.

Add a Comment