முயல்வாருள் எல்லாம் தலை
நன்மனச் சுடர்கள்
நரசிம்மன் மாமா – திலகவதி அத்தை இனிய 64 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்தும் வணக்கமும்
இணையற்ற இணையரின் திருமணம் காஞ்சிபுரத்தில்
23.6.1961 ஆம் ஆண்டு நடந்தது .
அருள் பெருகு திலகவதியார்
என்ற தொடரை உரைவேந்தர்
ஔவை துரைசாமி அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் என்று அப்பா பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன்.
கீழ் வீதியில் செல்வாக்கு வாய்ந்த குடும்பமாக நரசிம்மன் மாமா குடும்பம் விளங்கியது.
கடமையும் பொறுப்பும்
நரசிம்மன் மாமா அவர்களுக்கு
இரு கண்களாக ஒளிர்ந்தன .
அத்தை திலகவதியைப் போல பொறுமை காட்டுபவர்கள் யாருமில்லை என்ற அப்பா மகிழ்ச்சியாக சொல்லிப் பெருமைப்படுவார்.
மாமாவும் அத்தையும் தங்கள் சொந்த வீடு விருகம்பாக்கத்தில் கட்டிச் செல்வதற்கு முன்பு வாடகை வீட்டுக்காரர்கள் தங்கள் மக்கட் செல்வங்களை விட அத்தை மீது பேரன்பு காட்டுவார்கள்…
எங்கள் வீட்டை விட்டுவிட்டு நீங்கள் எங்கும் போகக்கூடாது என்று அவர்கள் காட்டிய பிடிவாதம் மிக வியப்பானதாகும் .
அந்த வீட்டை விட்டு வந்து குழந்தைகளோடு மகிழ்ந்து சொந்த வீட்டுக்காரர்களாக மாறிய பிறகும் கூட அத்தையையும் மாமாவையும் பார்த்து செல்வதற்காக தத்தம் வீட்டு உரிமையாளர்கள் வந்து போகும் அன்பின் நிலையினை எப்படி சொல்லி பாராட்டுவது….
திலகவதி அத்தைக்கு கோயில் வழிபாட்டில் கொள்ளை விருப்பம்.
அத்தை விரும்பியத்தைப் போலவே விருகம்பாக்கத்தில் கோயிலுக்கு அருகில் வீடு அமைந்ததால் ,
கோயிலின் வளர்ச்சிக்காக மாமாவும் அத்தையும் செய்த தொண்டுகளுக்கு எல்லையில்லை .
இல்லற குலவிளக்குகளான நரசிம்மன் மாமா அவர்களையும் திலகவதி அத்தை அவர்களையும் 23.6.25 திங்கட்கிழமை அன்று அவர்களின் விருகம்பாக்கம் இல்லத்திற்கு நேரில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றேன்

Add a Comment