செம்மொழி நாள்
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்று (மே 10) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன.
இதில் அரசுக் கல்லூரிளிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தலைப்புகள்
கட்டுரைப் போட்டி
✓ முத்தமிழறிஞர் கலைஞரின் கடித இலக்கியம்
பேச்சுப் போட்டி
✓ முத்தமிழறிஞர் கலைஞரின் ஆக்கமும்-செம்மொழித் தாக்கமும்
✓ தலைவர் கலைஞரின் தமிழ் தேசிய உணர்வு
மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெறும் 230-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு, 17 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பணப் பரிசுகள் காத்திருக்கின்றன.
குறிப்பாக, மாநில அளவில் முதல் மூன்று பரிசுகளாக – தலா ரூபாய் 15,000, 10,000 மற்றும் 7,000 வழங்கப்படுகிறது.
மேலும், பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் உண்டு.

Add a Comment